முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கும் ( Mahinda Rajapaksa) இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவுக்கும் இடையே சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த சந்திப்பானது நேற்று (22) விஜேராம உத்தியோகபூர்வ இல்லத்தில் நடைபெற்றுள்ளது.
அரசியல் கருத்து
இதன்போது, இருவரும் அரசியல் மற்றும் தனிப்பட்ட கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

நெருங்கிய அண்டை நாடுகளாக இரு நாடுகளுக்கும் இடையே நிலவும் ஆழமான நட்பை முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மரியாதையுடன் நினைவு கூர்ந்தார்.

