யாழ்ப்பாணம்(jaffna) பருத்தித்துறை பிரதான வீதி, கோப்பாய் சந்திக்கு அருகாமையில் உள்ள
வாய்க்காலில் இருந்து இன்றையதினம் (26) இனந்தெரியாத நபர் ஒருவரது சடலம் மீட்கப்பட்டது.
மீட்கப்பட்ட சடலத்தில் உள்ளவர் அந்தப் பகுதியை சேர்ந்தவர் இல்லை என்றும்,
யாசகம் பெறுபவராக இருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சடலம்
அவரது வயது 70-75
வரை இருக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது.
அவரது சடலம் மீட்கப்பட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில்
வைக்கப்பட்டுள்ளது.
சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி
ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார்.
அவரது உறவினர்கள் யாராவது வந்து சடலத்தை இனங்காணுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.