ஸ்ரீ தலதா வழிபாட்டுக்காக நடைமுறைப்படுத்தப்பட்ட விசேட தொடருந்து சேவை இடைநிறுத்தப்பட்டுள்ளது.
இதன்படி, கொழும்பு கோட்டையிலிருந்து கண்டிக்கு இயக்கப்பட்ட விசேட தொடருந்து சேவையை இடைநிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மறு அறிவிப்பு
இன்று (24) முதல் மறு அறிவிப்பு வரும் வரை இந்த விசேட தொடருந்து சேவை இடைநிறுத்தப்பட்டுள்ளது.

மேலும், பொலிஸாரின் வேண்டுகோளின் பேரில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தொடருந்து பொது முகாமையாளர் தெரிவித்துள்ளார்.

