முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

நிராகரிக்கப்பட்ட வேட்பு மனுக்கள் : நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு

புதிய இணைப்பு

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக நிராகரிக்கப்பட்ட சுமார் 37 வேட்புமனுக்களை மீண்டும் ஏற்றுக்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (04) உத்தரவிட்டது.

அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சைக் குழுக்கள் தங்கள் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டதை எதிர்த்து ரிட் மனுக்களை தாக்கல் செய்திருந்தன.

குறித்த மனுக்களை ஆராய்ந்த பிறகு, மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் பதில் தலைவர் மொஹமட் லாபர் தாஹிர் மற்றும் கே.பி. பெர்னாண்டோ ஆகியோர் அடங்கிய மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள் அமர்வு இந்த உத்தரவைப் பிறப்பித்தது. 

முதலாம் இணைப்பு 

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காகத் தாக்கல் செய்யப்பட்டு நிராகரிக்கப்பட்ட வேட்பு மனுக்கள் தொடர்பான நீதிமன்றத் தீர்ப்பு தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி குறித்த தீர்ப்பு இன்று (04) வெளியிடப்படவுள்ளதாக தெரிவிக்க்கப்படுகின்றது.

பிறப்புச் சான்றிதழின் மூலப்பிரதி இணைத்தல், சத்தியக் கடிதம் தொடர்பான பிரச்சினை மற்றும் பிறப்புச் சான்றிதழின் நகல் தொடர்பான பிரச்சினை என்பவற்றால் நிராகரிக்கப்பட்ட வேட்பு மனுக்கள் தொடர்பான தமது தீர்ப்பை மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று அறிவிக்கவுள்ளது.

நிராகரிக்கப்பட்ட வேட்பு மனுக்கள்

குறித்த நிராகரிக்கப்பட்ட வேட்பு மனுக்கள் தொடர்பான வழக்கு நேற்று (03) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.

நிராகரிக்கப்பட்ட வேட்பு மனுக்கள் : நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு | Verdict On Rejected Nomination For Lg Elections

அத்துடன், நிராகரிப்புக்கு உள்ளான வேட்பு மனுக்கள் தொடர்பாக நீதிமன்றில் வழக்கு விசாரணை இடம்பெறும் உள்ளூராட்சி மன்றங்களின் தேர்தல் நடவடிக்கைகளும் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன.

இதேவேளை வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்ட தரப்பினர் உயர்நீதிமன்றத்திலும் வழக்குத் தாக்கல் செய்துள்ள நிலையில், அது தொடர்பான தீர்ப்பும் இன்று வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.