ஜயவர்த்தனபுர பல்கலைக்கழக மாணவன் ஒருவர் பகிடிவதை காரணமாக சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்ப பீடத்தின் மூன்றாம் ஆண்டு மாணவன் ஒருவரே இவ்வாறு காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மருத்துவமனையில் அனுமதி
பல்கலைக்கழக வளாகத்தினுள் புனைப் பெயர் இன்றி நடமாடியதற்காக அவர் மீது மூன்றாம் ஆண்டு மற்றும் அதற்கு மேல்வகுப்பு மாணவர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

சுமார் 20 மாணவர்கள் ஒன்று சேர்ந்து தன் மீது தாக்குதல் தொடுத்ததாக குறித்த மாணவர் தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக காயமடைந்த அவர் தற்போதைக்கு வெலிகம கிராமிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தெரிய வந்துள்ளது.

