முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

தமிழ் கட்சிகளின் கூட்டணி நிராகரிக்கப்பட சுமந்திரனே காரணம் : கஜேந்திரகுமார் ஆதங்கம்

தமிழ் கட்சிகளை ஒன்றிணைக்கும் முயற்சியானது சுமந்திரன் (M. A. Sumanthiran) பொதுச்செயலாளராக வந்த பின்புதான் நிராகரிக்கப்பட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் (Gajendrakumar Ponnambalam) தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர் அறிமுக நிகழ்வொன்று நேற்று (08) இடம்பெற்றுள்ளது.

இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

அறுதிப்பெரும்பாண்மை

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,  “நாடாளுமன்றத்தில் 19 தமிழ் உறுப்பினர்கள் உள்ள போதும் 10 உறுப்பினர்களைக்கொண்ட அறுதிப்பெரும்பாண்மை ஒருவருக்கும் இல்லை.

தமிழ் கட்சிகளை ஒன்றிணைக்கும் முயற்சிகளை முன்னெடுத்த போதும் அது சாத்தியப்படவில்லை.

தமிழ் கட்சிகளின் கூட்டணி நிராகரிக்கப்பட சுமந்திரனே காரணம் : கஜேந்திரகுமார் ஆதங்கம் | Gajendrakumar Mp Opinion On Local Gov Election

சீ.வி.கே. சிவஞானத்துடன் பேசிய போது அதற்கு குழு அமைப்பதாக சொல்லியிருந்தார்.

அதன் பின்பு சுமந்திரன் பொதுச்செயலாளராக வந்த பின்பு அந்த விடயம் தேவையில்லை என்று சொல்லப்பட்டுள்ளது.

தவறான வழி

தற்போது தமிழரசுக்கட்சி ஆட்சி செய்பவர்கள் தமிழ்த்தேசிய நீக்க அரசியலை கொண்டு செல்பவர்கள்.

சுதந்திரதினம் கொண்டாட எத்தனிப்பவர்களும் சிங்கள கட்சிகளுக்கு இங்கு வைத்து ஆதரவு வழங்குபவர்களும் தான் உள்ளனர்.

தமிழ் கட்சிகளின் கூட்டணி நிராகரிக்கப்பட சுமந்திரனே காரணம் : கஜேந்திரகுமார் ஆதங்கம் | Gajendrakumar Mp Opinion On Local Gov Election

இந்தியப் பிரதமரை சந்திக்கும் போது நாங்கள் சமஸ்டியை வலியுறுத்தினோம், மற்றவர்கள் ஒற்றையாட்சி 13ஐ தான் வலியுறுத்தினார்கள்.

மக்களிடம் வாக்கு கேட்க வரும் போது சமஸ்டியை சொல்கிறார்கள், மக்கள் வழங்கும் ஆணையை தவறான வழியில் பயன்படுத்துகின்றனர்.

இந்தத் தேர்தலில் தமிழரசுக் கட்சி வடக்கு கிழக்கில் தோற்கடிக்கப்பட வேண்டும்” என அவர் தெரிவித்துள்ளார்.

https://www.youtube.com/embed/XaPBlOYDB8I

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்