முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

ட்ரெண்டாகும் ஜிப்லி படங்கள்: நிபுணர்கள் விடுத்துள்ள எச்சரிக்கை

தற்போது உலகளவில் அனைவரையும் ஆட்கொண்டுள்ள ஜிப்லி (ghibli)  படங்கள் குறித்து நிபுணர்கள் எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளனர்.

1985 ஆம் ஆண்டு ஜப்பானை சேர்ந்த ஹாயாவோ மியாசாகி, ‘ஜிப்லி ஸ்டூடியோ’ என்ற திரைப்பட நிறுவனத்தை தொடங்கி, கார்டூன்களை கைகளால் வரைந்து அதை அனிமேஷன் படங்களாக எடுக்க தொடங்கினார்.

தற்போது 40 வருடங்களுக்கு பின்னர் மீண்டும் ஜிப்லி படங்கள் ட்ரெண்ட் ஆகி வருகிறது.

ஜிப்லி படங்கள்

Open AI நிறுவனத்திற்கு சொந்தமான ChatGPT, ஜிப்லி படங்களை இலவசமாக உருவாக்கி தருவதால், குழந்தைகள் தொடங்கி, சினிமா கிரிக்கெட் பிரபலங்கள், பிரதமர் மோடி, எலான் மஸ்க் வரை தங்களது ஜிப்லி படங்களை உருவாக்கி சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர். 

முதலில் சந்தா செலுத்துபவர்களுக்கு மட்டுமே இந்த வசதியை வழங்கிய ChatGPT, தற்போது அனைத்து பயனர்களும் இலவசமாக ஜிப்லி படங்களை உருவாக்க அனுமதித்தது.

ட்ரெண்டாகும் ஜிப்லி படங்கள்: நிபுணர்கள் விடுத்துள்ள எச்சரிக்கை | Trending Ghibli Photos Experts Warn To Users

இதனால் ஒரு மணி நேரத்தில், 10 லட்சத்திற்கும் அதிகமான பயனர்கள் ChatGPTயை பயன்படுவதாக அதன் நிறுவனர் சாம் ஆல்ட்மென் தெரிவித்துள்ளார்.

அத்துடன், எக்ஸ் (X) தளத்தின் GROK, Google நிறுவனத்தின் Gemini, பயனர்கள் இலவசமாக ஜிப்லி படங்களை உருவாக்கும் வசதியை வழங்கியதால், இணையவாசிகள் தங்களது ஜிப்லி படங்களை உருவாக்கி சமூகவலைத்தளம் எங்கும் பதிவிட்டு வருகின்றனர்.

நிபுணர்களின் எச்சரிக்கை

இந்நிலையில், பயனர்கள் ஜிப்லி படங்களை உருவாக்க, தங்களது புகைப்படங்களை ChatGPT போன்ற தளங்களுக்கு வழங்குவதன் மூலம் தனியுரிமை பாதிப்பு குறித்து நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

இந்த புகைப்படங்களை உங்கள் அனுமதியின்றி, அந்த நிறுவனங்கள் தங்கள் AI செயலிகளுக்கு பயிற்சி அளிக்க பயன்படுத்த வாய்ப்புள்ளதோடு, உங்கள் புகைப்படங்களை அடிப்படையாக வைத்து AI அவதூறான படங்களை உருவாக்கவும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. 

ட்ரெண்டாகும் ஜிப்லி படங்கள்: நிபுணர்கள் விடுத்துள்ள எச்சரிக்கை | Trending Ghibli Photos Experts Warn To Users

பயனர்கள் படங்களை வழங்குவதன் மூலம், meta data, இருப்பிடம் போன்ற முக்கிய தகவல்களும் AI நிறுவனங்களுக்கு கிடைக்க வாய்ப்புள்ளது.

புகைப்படம், கைபேசி எண் போன்ற தகவல்களை வைத்து மோசடிகள் அதிகரித்து வரும் நிலையில், எந்த செயலியை பயன்படுத்துவதாக இருந்தாலும் அதில் உள்ள ஆபத்துகளையும் அறிந்து கவனமாக கையாள வேண்டும் என நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.