இரு தரப்பினரிடையே ஏற்பட்ட தகராறில் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் இன்று (13) மினுவங்கொட காவல்துறை பிரிவின் தேவலபொல பகுதியில் பதிவாகியுள்ளது.
உயிரிழந்தவர் கனேஹிமுல்ல, தேவலபொல பகுதியைச் சேர்ந்த 73 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.
மேலதிக விசாரணை
இறந்தவரின் வீட்டில் வளர்க்கப்பட்ட நாய் சந்தேக நபரின் வீட்டிற்குச் சென்றதால் ஏற்பட்ட தகராறில் இந்தக் கொலை நடந்துள்ளதாக இதுவரை நடத்தப்பட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த நிலையில், கொலைக்குப் பிறகு சந்தேக நபர் அப்பகுதியை விட்டுத் தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன்படி, சந்தேக நபரைக் கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை மினுவாங்கொட காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

