உலக வங்கியின் தலைவர் அஜே பங்கா(Ajay Banga) இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளார்.
அஜே பங்கா நாளைய தினம் இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை விஜயம்
உலக வங்கி இது தொடர்பில் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
உலக வங்கியின் தலைவர் இலங்கை அரசாங்கத்தின் முக்கியஸ்தர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
20 ஆண்டுகளின் பின்னர் உலக வங்கியின் தலைவர் ஒருவர் இலங்கைக்கு விஜயம் செய்வது இதுவே முதன்முறை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த விஜயத்தின் போது நாட்டின் பொருளாதார நிலைமைகள் குறித்து விசேட கவனம் செலுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

