காத்தான்குடியில் உள்ள பிரபலமான பாதணி விற்பனை நிலையமொன்றில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த தீ விபத்தானது இன்று (7) அதிகாலை இடம்பெற்றுள்ளது.
இதனையடுத்து, விற்பனை நிலையத்தில் இருந்த பொருட்கள் எரிந்து நாசமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பொலிஸார் விசாரணை
இதன் காரணமாக பல கோடி ரூபா இழப்பு ஏற்பட்டிருக்கலாம் என்று அஞ்சப்படுகின்றது.
காத்தான்குடி கடற்கரை வீதியில் இருந்த பிரபலமான பாதணி விற்பனை நிலையமே இவ்வாறு தீயில் எரிந்து நாசமாகியுள்ளது.

காத்தான்குடி நகரசபை மற்றும் மட்டக்களப்பு மாநகர சபைகளின் தீயணைப்பு வாகனங்கள் வருவிக்கப்பட்டு, தீயை கட்டுப்படுத்த மேற்கொண்ட முயற்சிகள் அனைத்தும் பயனற்றுப் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், சம்பவம் குறித்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

