முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

யாழ் இளைஞர்களிடம் காவல்துறையினரின் அத்துமீறல் : வெளியான அறிவிப்பு

யாழில் இருந்து வவுனியா நோக்கி சென்ற இளைஞர் குழுவினருடன் முரண்பட்டு, அவர்களை அச்சுறுத்தும் வகையில் செயற்பட்ட மாங்குளம் காவல்துறையினர் இருவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த விடயத்தை வடக்கு மாகாண சிரேஷ்ட பிரதி காவல்துறை மா அதிபர் திலக் தனபால தெரிவித்துள்ளார்.

இது குறித்து மேலும் தெரியவருகையில், மேற்படி, இளைஞர் குழுவினர் கடந்த 22 ஆம் திகதி யாழில் இருந்து வவுனியா நோக்கி காரில் பயணித்தனர்.

வழி மறிப்பது

இந்நிலையில், அந்த இளைஞர்களை மாங்குளம் காவல்துறையினர் வழி மறித்தனர்.

யாழ் இளைஞர்களிடம் காவல்துறையினரின் அத்துமீறல் : வெளியான அறிவிப்பு | Police Brutality Continues Against Jaffna Youth

வழி மறிக்கும் போது டோர்ச் லைட் வெளிச்சத்தை கண்ணில் பாய்ச்சியே வழி மறித்தனர்.

இந்நிலையில், இவ்வாறு வழி மறிப்பது தவறு என அந்த இளைஞர் குழு எடுத்து கூறியபோது அவர்களுடன் காவல்துறையினர் முரண்பாட்டில் ஈடுபட்டதோடு அவர்களை அச்சுறுத்தினர்.

எதிராக விசாரணை

அத்துடன் தகட்டு இலக்கத்தையும் வழங்க மறுத்ததுடன், அராஜகத்தில் ஈடுபட்டனர்.

யாழ் இளைஞர்களிடம் காவல்துறையினரின் அத்துமீறல் : வெளியான அறிவிப்பு | Police Brutality Continues Against Jaffna Youth

இந்த சம்பவத்தை அந்த இளைஞர் குழுவினர் ஊடகங்கள் ஊடாக வெளிக்கொண்டு வந்திருந்த நிலையில், வடக்கு மாகாண சிரேஷ்ட பிரதி காவல்துறை மா அதிபர் திலக் தனபாலவின் கவனத்துக்கும் கொண்டு சென்றனர்.

இந்நிலையில், குறித்த காவல்துறை உத்தியோகத்தர்கள் இருவருக்கும் எதிராக விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக வடக்கு மாகாண சிரேஷ்ட பிரதி காவல்துறை மா அதிபர் திலக் தனபால தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்