கொட்டாஞ்சேனையில் தவறான முடிவெடுத்து உயிரிழந்த மாணவி இராமநாதன் கல்லூரி ஆசிரியரால் தவறான முறைக்கு உட்படுத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த விடயம் தொடர்பில் பொலிஸார் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
உயிரிழந்த மாணவி, கடந்த டிசம்பர் மாதம் பாதிப்புக்கு உள்ளானதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குற்றம் சாட்டப்பட்டுள்ள ஆசிரியர்
இதனையடுத்து, கைது செய்யப்பட்ட ஆசிரியர் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டதோடு அவருக்கு வெளிநாடு செல்ல தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது.

இந்நிலையில், பாதிக்கப்பட்ட மாணவி, கடந்த மாதம் 29ஆம் திகதி தவறான முடிவெடுத்து தனது உயிரை மாய்த்துக் கொண்டார்.
தனியார் வகுப்பொன்றின் உரிமையாளரான சிவானந்தராஜா, மாணவியை பலர் முன்னிலையில் அவமானப்படுத்தியமையே அவர் தவறான முடிவெடுக்க காரணமாக கூறப்படுகின்றது.
இந்நிலையில், நேற்றையதினம்(09.10.2025) குற்றப்புலனாய்வில் முன்னிலையான சிவானந்தராஜா, தனக்கும் மாணவியின் மரணத்திற்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

