முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

தபால் மூல வாக்களிப்பு : அரச ஊழியர்களுக்கு வழங்கப்பட்டுள்ள இறுதி சந்தர்ப்பம்

புதிய இணைப்பு

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு இன்றுடன் (29) நிறைவடைவதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதுவரை தபால் மூலம் வாக்களிக்க முடியாத அரச ஊழியர்கள் இன்று தங்கள் பணியிடங்களில் தபால் மூலம் வாக்களிக்க வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க (Saman Sri Ratnayake) தெரிவித்தார்.

இம்முறை உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு கடந்த 24 ஆம் திகதி ஆரம்பமான நிலையில், 25 மற்றும் 28 ஆம் திகதிகளிலும் இதற்காக சந்தர்ப்பம் வழங்கப்பட்டிருந்தது.

 வாக்காளர் அட்டை விநியோகம்

இதேவேளை, உள்ளூராட்சித் தேர்தலுக்கான வாக்காளர் அட்டை விநியோகம் இன்றுடன் நிறைவடைய உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

தபால் மூல வாக்களிப்பு : அரச ஊழியர்களுக்கு வழங்கப்பட்டுள்ள இறுதி சந்தர்ப்பம் | Lg Election Postal Voting Third Day Today

தற்போது வரை சுமார் 90 சதவீத வாக்காளர் அட்டைகள் விநியோகிக்கப்பட்டுள்ளதாக தபால் மா அதிபர் ருவன் சத்குமார (Ruwan Sathkumara) தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

முதலாம் இணைப்பு

தபால்மூல வாக்களிப்பின் மூன்றாம் நாள் இன்று

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு இன்று (28) மூன்றாவது நாளாக இடம்பெறவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு (Election Commission of Sri lanka) தெரிவித்துள்ளது.

கடந்த 24 மற்றும் 25ஆம் திகதிகளில் தபால் மூல வாக்களிப்பை பதிவு செய்ய முடியாதவர்களுக்கு இன்றும் (25) நாளையும் (29) வாக்களிப்பை மேற்கொள்வதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அரச நிறுவனங்கள், காவல்துறை, முப்படை, பாடசாலை, கூட்டுத்தாபனங்கள் மற்றும் நியதிச்சட்ட நிறுவனங்கள் உட்பட அனைத்து நிறுவனங்களிலிருந்தும் தபால் மூல வாக்காளர்கள் மேற்படி நான்கு நாட்களில் தங்களது தபால் மூல வாக்குகளை பதிவு செய்ய முடியுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல்கள் ஆணைக்குழு

இம்முறை உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பாக 648,495 விண்ணப்பதாரர்கள் தபால் மூலம் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

தபால் மூல வாக்களிப்பு : அரச ஊழியர்களுக்கு வழங்கப்பட்டுள்ள இறுதி சந்தர்ப்பம் | Lg Election Postal Voting Third Day Today

இதேவேளை, உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு கிடைத்த முறைப்பாடுகளின் எண்ணிக்கை 3,000ஐ கடந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

நாடளாவிய ரீதியில் எதிர்வரும் 06 ஆம் திகதி உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.