முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

ஐபிசி தமிழ் கலையகத்தில் நினைவு கூரப்பட்ட தராகி சிவராம்

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளரான தராகி சிவராமின் (Taraki Sivaram) 20 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு யாழ். ஐபிசி தமிழ் கலையகத்தில் இன்றைய தினம் (28.04.2025) உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.

இதன்போது, தராகி சிவராமுடன் சமகாலத்தில் பணியாற்றிய சிரேஸ்ட ஊடகவியலாளர் இரா.துரைரெட்ணம் சிறப்புரை ஆற்றினார்.

குறித்த நிகழ்வில் ஊடகவியலாளர் சிவராமின் திருவுருவப்படத்துக்கு மலர்மாலை அணிவிக்கப்பட்டு சுடரேற்றி மலர்தூவி அகவணக்கம் செலுத்தப்பட்டது.

நினைவேந்தல் நிகழ்வு

நினைவேந்தல் நிகழ்வில், சிரேஸ்ட ஊடகவியலாளர்கள், முகாமையாளர் உள்ளிட்ட பலரும் கலந்துக் கொண்டிருந்தனர்.

ஐபிசி தமிழ் கலையகத்தில் நினைவு கூரப்பட்ட தராகி சிவராம் | Taraki Sivaram Remembered At The Ibc Tamil Jaffna

இதேவேளை வடக்கு – கிழக்கு உள்ளிட்ட பல பகுதிகளிலும் ஊடகவியலாளர் தராகி சிவராம் மற்றும் ரஜீவர்மன் ஆகியோரின் நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெற்றிருந்தன.

ஊடகவியலாளரான தராகி சிவராம் என்றழைக்கப்படும் தர்மரத்தினம் சிவராம் (Taraki Sivaram) கடந்த 2005 ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 28ம் திகதி கொழும்பு (Colombo) பம்பலப்பிட்டி காவல் நிலையத்திற்கு அருகில் வைத்து வெள்ளை வானில் வந்த இனம் தெரியாதவர்களால் படுகொலை செய்யப்பட்டார்.

இதேவேளை, ஊடகவியலாளரான செல்வராஜா ரஜீவர்மன் அச்சு ஊடகம் ஒன்றின் அலுவலக செய்தியாளராக கடமையாற்றி வந்த வேளை கடந்த 2007ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 29ம் திகதி காலை 10 மணியளவில் ஸ்ரான்லி வீதியில் வைத்து மோட்டார் சைக்கிளில் வந்த இனம் தெரியாத நபர்களால் சுட்டுப்படுகொலை செய்யப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

GalleryGalleryGalleryGalleryGallery

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்