2012 ஆம் ஆண்டு 21 வயது இளைஞன் கொலை செய்யப்பட்ட வழக்கில் ஐந்து பேருக்கு கொழும்பு உயர் நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது.
நீண்ட விசாரணைகளின் பின்னர் இன்று (28) தீர்ப்பை வெளியிட்ட நீதிமன்றம், இந்த சம்பவம் தொடர்பாக மேலும் இரண்டு பேருக்கு ஆயுள் தண்டனை விதித்தது.
கொலை நடந்த நேரத்தில் அவர்கள் 18 வயதுக்குட்பட்டவர்களாக இருந்ததால் அவர்களுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
குற்றச்சாட்டுகள்
2012 செப்டம்பரில் மட்டக்குளியவில் உள்ள ஒரு கோவிலுக்கு அருகில் நடந்த மோதலின் போது 21 வயது இளைஞனைத் தாக்கி கொலை செய்ததற்காக இந்தக் குழுவிற்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

நீண்ட விசாரணைக்குப் பிறகு தீர்ப்பை அறிவித்த கொழும்பு உயர் நீதிமன்ற நீதிபதி நவரட்ண மாரசிங்க, குற்றச்சாட்டுகள் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

