மே தினக் கூட்டம் நடைபெறும் பிரதேச செயலகப் பிரிவுகளில் உள்ள மதுபானசாலைகளை நாளை மூடுமாறு மதுவரித் திணைக்களம் (Excise Department of Sri Lanka) அறிவித்துள்ளது.
அறிக்கை ஒன்றை வெளியிட்டு அந்த திணைக்களம் இதனை தெரிவித்துள்ளது.
தொழிலாளர் தினம்
அதன்படி, சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு நாளை (01.05.2025) மதுபானசாலைகள் மூடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் மே தினக் கூட்டம் நடைபெறும் பிரதேசங்களில் காணப்படும் சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் அனுமதியுள்ள உணவகங்களுக்கு இது பொருந்தாது எனவும் மதுவரித் திணைக்களம் தனது அறிவித்தலில் குறிப்பிட்டுள்ளது.

