முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

மன்னாரில் 87 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமாக கேரள கஞ்சா பொதிகள் மீட்பு

மன்னார், பேசாலை கடற்கரை பிரதேசத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (11) இலங்கை
கடற்படை நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, 87 மில்லியன்
ரூபாய்க்கும் அதிகமாக கேரள கஞ்சா பொதிகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக கடற்படை
தெரிவித்துள்ளது.

மன்னார், பேசாலை கடற்கரை பிரதேசத்தில் இலங்கை கடற்படை நடத்திய சிறப்பு
தேடுதல் நடவடிக்கையின் போது 218 கிலோ, 800 கிராம் கிராம் கேரள கஞ்சா
பொதிகளுடன் ஆளில்லாத நிலையில் கண்ணாடி இழை படகு ஒன்று கடற் படையினரால்
கைப்பற்றப்பட்டது.

அதன்படி, வடமத்திய கடற்படை கட்டளையின், இலங்கை கடற்படை கப்பல் கஜபா
நிறுவனத்தினால் பேசாலை கடற்கரை பிரதேசத்தில் நடத்திய தேடுதல் நடவடிக்கையின்
போது, அந்த கடல் பகுதியில் சந்தேகத்திற்கிடமான படகு ஒன்று அவதானித்து சோதனை
செய்யப்பட்டது.

எட்டு பொதிகள்

அங்கு, படகில், எட்டு பொதிகளில் பொதி செய்யப்பட்டிருந்த 218 கிலோ 800
கிராம் கேரள கஞ்சாவுடன் படகையும் கடற்படையினர் கைப்பற்றினர்.

மன்னாரில் 87 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமாக கேரள கஞ்சா பொதிகள் மீட்பு | Kerala Ganja Packages Worth Rs 87 Million

கடற்படையின் நடவடிக்கைகளால் படகை கரைக்கு கொண்டு வர முடியாததால், கடத்தல்
காரர்கள் பேசாலை கடற்கரையில் படகுடன் கேரள கஞ்சாவினை கை விட்டிருக்கலாம்
என்று சந்தேகிக்கப்படுகிறது.

.கடற் படையினரால் கைப்பற்றப்பட்ட கேரள கஞ்சாவின் மொத்த மதிப்பு 87 மில்லியன்
ரூபாய்க்கும் அதிகமாக இருக்கும் என்று நம்பப்படுகிறது.

மேலும், கேரள கஞ்சா பொதிகள் மற்றும் படகு ஆகியன மேலதிக சட்ட
நடவடிக்கைகளுக்காக பேசாலை காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட உள்ளதாக கடற்படை
தெரிவித்துள்ளது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்