ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்ப பீடத்தில் கற்று வந்த மாணவர் ஒருவரை தாக்கிய சக மாணவர்கள் வகுப்புகளில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த விடயத்தை ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் மூத்த பேராசிரியர் பத்மலால் எம். மானேஜ் தெரிவித்துள்ளார்.
அத்துடன், சந்தேகநபர்களான மாணர்களுக்கு பல்கலைக்கழக வளாகத்திற்குள் நுழைவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
சட்ட நடவடிக்கை
இதேவெளை, தாக்குதல் நடத்திய மாணவர்களின் தகவல்கள் ஹோமாகம காவல்துறைக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும், அவர்கள் மீது சிவில் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் துணைவேந்தர் மேலும் தெரிவத்துள்ளார்.

பல்கலைக்கழகத்தில் இடம்பெற்று வந்த பகிடி வதைகளுக்கு எதிராக செயற்பட்டமையால் குறித்த மாணவன் மீது இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

