முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

இலங்கை அரசின் கொடூரம்! முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு

இலங்கை அரசின் கொடூரமும், கஞ்சிகூட இன்றி எமது மக்கள் உயிரிழக்கச் செய்யப்பட்ட
மனிதாபிமானமற்ற செயற்பாட்டினையும் எமது எதிர்கால சந்ததியினர் அறிந்துகொள்ளவேண்டும்
என்பதுடன் எமது மக்களுக்கான நீதி நிலைநாட்டப்படவேண்டும் என்பதற்காக இன அழிப்பு
வாரத்தினை தொடர்ச்சியாக முன்னெடுத்துவருதாக மட்டக்களப்பு மாவட்ட
வலிந்துகாணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் சங்கத்தின் தலைவி அ.அமலநாயகி
தெரிவித்துள்ளார்.

வடக்கு – கிழக்கில் முன்னெடுக்கப்பட்டுவரும் இன அழிப்பு வாரத்தின் இரண்டாம் நாள்
நிகழ்வுகள் இன்று மட்டக்களப்பில் உணர்வுபூர்வமாக நடைபெற்றது.

மட்டக்களப்பு மாவட்ட வலிந்துகாணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் சங்கத்தின் ஏற்பாட்டில்
மட்டக்களப்பு காந்திபூங்காவில் இந்த நிகழ்வு நடைபெற்றது.

இதன்போது உப்பில்லா கஞ்சிகாய்ச்சும் நிகழ்வு நடைபெற்றதுடன், இறுதி
யுத்ததின்போது அழிப்பு செய்யப்பட்ட பொதுமக்கள் மற்றும் கடத்தப்பட்டு
காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் மற்றும் தமது உறவுகளை தேடி உயிர்நீர்த்த
தாய்மார்களுக்காக அஞ்சலி செலுத்தியதைத்  தொடர்ந்து கஞ்சி பகிர்ந்தளிக்கும்
நிகழ்வு நடைபெற்றது.

இலங்கை அரசின் கொடூரம்! முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு | Mullivaikkal Memorial Kanji

இதன்போது கருத்து தெரிவித்த மட்டக்களப்பு மாவட்ட வலிந்துகாணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் சங்கத்தின் தலைவி,

முள்ளிவாய்க்காலில் இறுதி நேரத்தில் கஞ்சி கூட கிடைக்காமல் எத்தனையோ அப்பாவி
சிறுவர்கள் பொதுமக்கள் வயோதிபர்கள் தாய்மார்கள் என்று கையில் இருந்த கொஞ்சம்
பிடி அரிசிகளை சேகரித்து சிறிய அளவு உப்பை சேர்த்து கிடைத்த நீரை ஊற்றி கஞ்சி
தயாரித்து குடிப்பதற்கு பாத்திரங்கள் இன்றி சிரட்டைகளில் தான் அந்த கஞ்சியினை
வேண்டி அதுவும் வரிசையில் நின்று வேண்டுவதற்கு பாடுபட்டு கஞ்சியினை அருந்தி
உயிர் தப்பியவர்களும் உண்டு அது கிடைக்காமல் உயிரிழந்த அப்பாவி பொதுமக்களும்
சிறுவர்களும் இருக்கின்றனர்.

2009 ஆம் ஆண்டு கடைசி யுத்தத்தில் இந்த இலங்கை அரசாங்கம் செய்த அநியாயம்
கொடூரமான செல் தாக்குதல்களும் குண்டு வெடிப்புகளும் இதன் போது எமது மக்கள்
சிதறிக் கொண்டிருந்த வேளையில் இந்த கஞ்சிக்கு கூட இல்லாமல் நிறைய கஷ்டங்களை
அனுபவித்து உயிர் இழந்த மக்களை நினைவு கூறும் முகமாக இன்று வடக்கு கிழக்கு
அனைத்து பகுதிகளிலும் அனைவரும் இன அழிப்பு வார கஞ்சியினை வழங்கி
வருகின்றார்கள்.

இலங்கை அரசின் கொடூரம்! முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு | Mullivaikkal Memorial Kanji

அந்த வகையில் இன்றைய தினம் மட்டக்களப்பு மாவட்டத்தில் நாங்கள் இதனை
முன்னெடுத்து வருகின்றோம். அடுத்த சந்ததியினருக்கு இவற்றை கொண்டு செல்லும்
முகமாக துண்டு பிரசுரங்களும் வழங்கி இந்த மக்கள் அனுபவித்த கஷ்டங்களை நினைவு
கூறும் முகமாக கஞ்சியினை மக்களுக்கு வழங்கிய நினைவு கூர்ந்து வருகின்றோம்.

மக்கள் அனைவரும் ஆர்வத்துடன் வந்து இந்த கஞ்சியினை பருகுகின்றார்கள் இதனை
அடுத்த சந்ததிக்கு கொண்டு செல்வார்கள் இளம் சமூகங்கள் இதனைப் பற்றி
மறந்தவர்களாகவும் அல்லது அறியாதவர்களாகவும் இருக்கின்றார்கள் அதற்கு எமது இனம்
இதனை மறந்து விடக்கூடாது என்பதற்காக இந்த கட்சியினை பரிமாறுகின்றோம்.

இலங்கை அரசின் கொடூரம்! முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு | Mullivaikkal Memorial Kanji

சர்வதேசத்திற்கும் இதனை எடுத்துக்காட்டி இத்தனை வருடமும் இடம்பெற்ற இன
அழிப்புக்கு எதிர்வித பதிலும் கிடைக்கவில்லை ஆகவே சர்வதேசமும் இனியும்
பாராமுகமாக இருக்காது எங்களுக்கு நடைபெற்ற இந்த அநியாயத்துக்கு நீதியை
பெற்றுத்தர வேண்டும் என்பதனை கேட்டுக் கொள்கின்றோம்  என குறிப்பிட்டுள்ளார். 

இலங்கை அரசின் கொடூரம்! முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு | Mullivaikkal Memorial Kanji

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.