மின்சார கட்டண திருத்தம் தொடர்பான முடிவு அடுத்த மாதம் தொடக்கத்தில் அறிவிக்கப்படலாம் என வலுசக்தி அமைச்சர் குமார ஜெயக்கொடி (Kumara Jayakodi) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
நேற்றைய (08) நாடாளுமன்ற அமர்வில் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பி. பெரேரா (Ajith P. Perera) எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “வீடுகளுக்கும் தொழிற்சாலைகளுக்கும் மிகக் குறைந்த விலையில் மின்சாரம் வழங்க நாங்கள் உண்மையிலேயே விரும்புகிறோம். அதுதான் எங்கள் முதன்மையான குறிக்கோள்.
மின்சார சபை
நாங்கள் குறைக்கவோ அல்லது அதிகரிக்கவோ கூடாது என்ற நோக்கத்துடன் தான் செயல்படுகிறோம்.
இந்த சூழ்நிலையிலேயே செயற்படுகிறோம். நாங்கள் எங்கும் ஐ.எம்.எப் கூறியதாக அதிகரிக்கவில்லை.
அப்படி எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.

மின்சார சபை இன்னும் கணக்கீடுகளை சமர்ப்பிக்கவில்லை.
இந்த மாத இறுதிக்குள் அல்லது அடுத்த மாத தொடக்கத்தில் பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவிடம் அதைப் பெறுவோம்.
மின்சார கட்டணம்
இன்னும் முடிவு செய்யவில்லை. அதிகரிக்க மாட்டோம் என்று நாங்கள் நம்பிக்கையுடன் இருக்கிறோம்.
ஆனால் மறுபுறம் பல விடயங்கள் உள்ளன. கடன் இருக்கிறது. கடன் தொகையில் ஒரு பகுதியை மின்சார கட்டணத்தில் சேர்க்க வேண்டும்.

அடுத்த மாத தொடக்கத்தில் நாங்கள் உங்களுக்கு இது குறித்து கூறமுடியும். அரசாங்கம் எதிர்மறையான இடத்தில் இல்லை.” இல்லை என்றார்.
இதேவேளை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச (Sajith Premadasa), நிதி பிரதியமைச்சர் ஹர்ஷன சூரியப்பெரும (Harshana Suriyapperuma), நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா (Harsha de Silva) ஆகியோரும் இந்த விடயம் தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

