முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

இராமநாதன் கல்லூரி மாணவி மரணம் : ஆசிரியருக்கு அதிரடியாக கட்டாய விடுமுறை

புதிய இணைப்பு

கொட்டாஞ்சேனை மாணவி உயிரிழப்பு விவகாரத்துடன் தொடர்புடைய ஆசிரியரை கட்டாய விடுமுறையில் அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கொட்டாஞ்சேனை மாணவியின் மரணம் தொடர்பாக காவல்துறை பீ அறிக்கை கிடைத்துள்ள நிலையில் அதற்கமைய குறித்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அந்த அறிக்கைக்கமைய குறித்த ஆசிரியரை நிறுவன கோவைச் சட்டத்தின் பிரகாரம் கட்டாய விடுமுறையில் அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆரம்பக்கட்ட விசாரணைகள் 

குறித்த விடயத்தை கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் செயலாளர் நாலக களுவெவ தெரிவித்துள்ளார்.

இராமநாதன் கல்லூரி மாணவி மரணம் : ஆசிரியருக்கு அதிரடியாக கட்டாய விடுமுறை | Kottehana School Girl Death Abuse Case Teacher

இந்தச் சம்பவம் தொடர்பான ஆரம்பக்கட்ட விசாரணைகள் தற்போது இடம்பெற்று வருவதுடன் அந்த விசாரணை அறிக்கை கிடைத்தவுடன் முறையாக ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பதற்கு தேவையான நடவடிக்கை எடுக்கப்படுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த ஒட்டுமொத்த சம்பவத்திலும் ஏதாவதொரு தரப்பு அவர்களின் கடமைகளை நிறைவேற்ற தவறியுள்ளார்களா என்பது தொடர்பில் தேடிப்பார்ப்பதற்கு அமைச்சினால் உள்ளக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முதலாம் இணைப்பு 

கொழும்பு இராமநாதன் கல்லூரி (Ramanathan Hindu Ladies College) மாணவியின் மரணத்திற்கு காரணமானவருக்கு உச்ச தண்டனை
வழங்க வேண்டும் என இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

குறித்த விடயத்தை இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் அறிக்கையொன்றை வெளியிட்டு குறிப்பிட்டுள்ளது.

இது தொடர்பில் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, யாழ்ப்பாணம் புங்குடுதீவில் மாணவி வித்தியா கோரமாகக் கொலை செய்யப்பட்ட போது
இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் பல்லாயிரம் பேரை ஒன்று திரட்டி
குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்க பேரணி நடாத்தியதை யாவரும் அறிவர்.

தலை நகர் பகுதி 

அதேபோன்று
இலங்கையின் தலை நகர் பகுதி கொழும்பில் தமிழ் மாணவியொருவர் பரிதாபமாகக்
கொல்லப்பட்டிருக்கின்றார்.

இராமநாதன் கல்லூரி மாணவி மரணம் : ஆசிரியருக்கு அதிரடியாக கட்டாய விடுமுறை | Kottehana School Girl Death Abuse Case Teacher

இதனை பலரும் மூடி மறைத்து குறித்த குற்றவாளிக்கு வெறும் இடமாற்றம் மட்டும்
வழங்கப்பட்டிருக்கின்றது.

இராமநாதன் மகளிர் கல்லூரியில் சில ஆசிரியர்கள் இடமாற்றம் வழங்கப்பட்டாலும்
ஆசிரிய சங்கத்தின் அனுசரணையோடு பல ஆண்டுகள் அங்கேயே பணியாற்றுகின்றனர், இது
உண்மை.

ஆசிரிய சங்கம்

இந்த கொலைச் சம்பவத்தையும் அதே நபர்கள் மூடி மறைக்க முனைந்துள்ளனர், குற்றவாளியாகக் காணப்படுபவரும் ஆசிரிய சங்கம் ஒன்றில் மிகவும் செல்வாக்கு
மிக்கவர்.

அதனாலேயே ஏற்கனவே இவர் இழைத்த குற்றத்திற்கு தண்டனை வழங்கப்படவில்லை இது போன்று சில மாவட்டங்களிலும் சிலர் பாதுகாக்கப்படுகின்றனர்.

இராமநாதன் கல்லூரி மாணவி மரணம் : ஆசிரியருக்கு அதிரடியாக கட்டாய விடுமுறை | Kottehana School Girl Death Abuse Case Teacher

எதுவாயினும் ஒரு பிள்ளையின் மரணத்திற்கு ஒரு ஆசிரியர் காரணமாக இருந்தால்
அவருக்கு மரண தண்டனை வழங்கப்பட வேண்டும்.

ஆகையால் குற்றவாளிக்குத் தண்டனை வழங்கப்படும் அதேவேளை உடந்தையானவர்களை
வெளிப்படுத்தி அவர்களுக்கும் தண்டனை வழங்க வேண்டும், என கேட்டுக்கொள்கின்றோம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.