முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

கோர விபத்து : மனதை கலங்க வைத்த தாயின் பாசப்போராட்டம் – வைரலாகும் புகைப்படம்

புதிய இணைப்பு

நுவரெலியா – கம்பளை பிரதான வீதியின் கொத்மலை கெரண்டிஎல்ல பகுதியில் இன்று (11) அதிகாலை இடம்பெற்ற கோர விபத்தில் 22 பேர் உயிரிழந்துள்ளனர்.

இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளானது.

கோர விபத்து : மனதை கலங்க வைத்த தாயின் பாசப்போராட்டம் - வைரலாகும் புகைப்படம் | Sl Gov Resolution To Provide Compensation

இந்நிலையில், அந்த பேருந்துக்கு அடியில் சிக்கிக்கொண்ட பெண்ணொருவர், தன்னுடைய குழந்​தையை காப்பாற்றியுள்ளார். 

தற்போது அந்தப் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

சர்வதேச அன்னையர் தினமான இந்த தினத்தில் பெரும் மதிப்புக்கு உரிய தாய் என்று பலரும் அந்தத் தாய்க்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். 

முதலாம் இணைப்பு

கொத்மலை (Kotmale)  ரம்பொடை (Ramboda) – கெரண்டிஎல்ல பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. 

ரம்பொட – கெரண்டிஎல்ல பகுதியில் வைத்து அரச பேருந்து ஒன்று பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்து இன்று (11.05.2025) அதிகாலை 4:30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

கோர பேருந்து விபத்து

கதிர்காமத்திலிருந்து குருநாகல் நோக்கிச் சென்ற இலங்கை போக்குவரத்துக் சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்று, நுவரெலியா – கம்பளை பிரதான வீதியில் கொத்மலை ரம்பொட கெரண்டிஎல்ல பகுதியில் சுமார் 100 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானது.

கோர விபத்து : மனதை கலங்க வைத்த தாயின் பாசப்போராட்டம் - வைரலாகும் புகைப்படம் | Sl Gov Resolution To Provide Compensation

இந்த கோர பேருந்து விபத்தில் தற்போது வரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 21 ஆக உயர்வடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

அதற்கமைய, விபத்தில் உயிரிழந்த ஒவ்வொருவரின் குடும்பங்களுக்கும் தலா ஒரு மில்லியன் ரூபா வழங்கப்படவுள்ளதாக போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன தெரிவித்துள்ளார்.

https://www.youtube.com/embed/Jhk_FfGZxVg

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.