மறுஅறிவித்தல் வரை வாகனங்களுக்கான புதிய இலக்கத் தகடு விநியோகம் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் அறிவித்துள்ளது.
இது தொடர்பான அறிவித்தல் ஒன்றை மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளர் வெத்தசிங்க ஊடகங்களுக்கு அனுப்பியுள்ளார்.
பதிவு இலக்கத் தகடு
அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, வாகனமொன்றைப் புதிதாக பதிவு செய்யும் போது அதற்கான பதிவு இலக்கத் தகடு ஒன்றை வழங்குவது கட்டாயமானது.

எனினும் இலக்கத் தகடுகள் பற்றாக்குறை காரணமாக கடந்த ஏப்ரல் மாதம் 28ம் திகதி தொடக்கம் இலக்கத்தகடுகள் வழங்கும் செயற்பாடு இடைநிறுத்தப்பட்டுள்ளது.
இந்த நடைமுறை மறுஅறிவித்தல் வரை தொடரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

