முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

மன்னாரில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை முன்னிட்டு யாழ். பல்கலையால் கஞ்சி வழங்கும் நிகழ்வு

புதிய இணைப்பு

யாழ் பல்கலைக்கழக சமூகம் ஏற்பாடு செய்த முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் கஞ்சி
வழங்கும் நிகழ்வு இன்றைய தினம் வியாழக்கிழமை (15) மதியம் மன்னார் நகர
பேருந்து நிலைய பகுதியில் இடம்பெற்றது.

எம்மவர்களின் வலி நிறைந்த வரலாற்றை அடுத்த சந்ததியினருக்கும், இளைய
தலைமுறையினருக்கும் கடத்தும் கடமை பல்கலைக்கழக மாணவர்களாகிய தமது பொறுப்பு என
அவர்கள் தெரிவித்து குறித்த நிகழ்வை ஆரம்பித்து வைத்தனர்.

இதன்போது குறித்த பகுதியில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் கஞ்சி
காய்ச்சப்பட்டு மக்களுக்கு வழங்கி வைக்கப்பட்டது.

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் கஞ்சி

மே-12 ஆம் திகதி தொடக்கம் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தை யாழ்
பல்கலைக்கழக சமூகம் முள்ளிவாய்க்கால் நினைவு வாரமாக ஒவ்வொரு மாவட்டங்களிலும்
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் கஞ்சியை நேரடியாக சென்று காய்ச்சி மக்களுக்கு
வழங்கி வருகின்றனர்.

மன்னாரில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை முன்னிட்டு யாழ். பல்கலையால் கஞ்சி வழங்கும் நிகழ்வு | Blood Donation At Jaffna Uni For Mullivaikkal Week

இந்த நிலையிலே இன்றைய தினம் வியாழக்கிழமை 4வது நாளாக மன்னாரில்
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் கஞ்சி வழங்கப்பட்டதாக மன்னாரிற்கு வருகை தந்த
யாழ் பல்கலைக்கழக சமூகத்தினர் தெரிவித்தனர்.

மன்னாரில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை முன்னிட்டு யாழ். பல்கலையால் கஞ்சி வழங்கும் நிகழ்வு | Blood Donation At Jaffna Uni For Mullivaikkal Week

முதலாம் இணைப்பு

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தை முன்னிட்டு யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் (University of Jaffna) இரத்ததான முகாம் ஒன்று நடைபெற்றது.

யாழ்ப்பாண பல்கலைக்கழக சமூகத்தின் ஒருங்கிணைப்பில் இன்றையதினம் (13) குறித்த இரத்ததான முகாம் முன்னெடுக்கப்பட்டது.

“குருதியால் தோய்ந்த நம்
தேசத்திற்காய் ஒரு துளி குருதி” எனும் கருப்பொருளில் மாபெரும் இந்த இரத்ததான முகாம் இடம்பெற்றது.

குருதிக்கொடையில் ஈடுபட்டோர்

இதில் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர்கள், பொதுமக்கள் பலரும் கலந்துகொண்டு
குருதிக்கொடையில் ஈடுபட்டனர்.

மன்னாரில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை முன்னிட்டு யாழ். பல்கலையால் கஞ்சி வழங்கும் நிகழ்வு | Blood Donation At Jaffna Uni For Mullivaikkal Week

தமிழ், சிங்கள, முஸ்லிம் மாணவர்கள் என அனைவரும்
இனம், மதம், மொழி பேதங்களை கடந்து இந்த இரத்ததான முகாமில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையை நினைவுகூரும் முகமாக வடக்கு, கிழக்கின் பல பகுதிகளில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு முன்னெடுக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

GalleryGallery

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்