முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

பலத்த காற்றுடன் கூடிய மழையால் வீடுகளுக்கு சேதம்

புதிய இணைப்பு

மன்னாரில் வீசிய பலத்த காற்று மற்றும் மழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிதார்.

மன்னாரில் இன்று காலை 6 மணி அளவில் கடும் காற்று வீசியதுடன் மழையும் பெய்தது.

பலத்த காற்றுடன் கூடிய மழையால் வீடுகளுக்கு சேதம் | Today Weather Forecast Meteorology Dept In Tamil

இதனால் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சில மணி நேரம் இ மின்தடை ஏற்பட்ட நிலையில் பின்னர் மின்சாரம் வழமைக்கு திரும்பியுள்ளது.

மேலும் பலத்த காற்று மற்றும் மழை காரணமாக மன்னார் பேசாலை கிராம கடற்றொழிலாளர்கள் பாதிப்பை எதிர்நோக்கியுள்ளனர்.

பலத்த காற்றுடன் கூடிய மழையால் வீடுகளுக்கு சேதம் | Today Weather Forecast Meteorology Dept In Tamil

மேலும் கரையில் நிறுத்தி வைக்கப்பட்ட டோலர் படகுகள் மற்றும் கண்ணாடி இழை படகுகள் காற்றில் சிக்கிய நிலையில் கரையில் ஒதுக்கப்பட்டது.

மேலும் மன்னார் மாவட்டத்தில் உள்ள ஏனைய மீனவ கிராமங்களிலும் மீனவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.தாழ் நிலப்பகுதிகள் வெள்ள நீர் தேங்கியுள்ளதுடன் மக்களின் இயல்பு வாழ்க்கையும் சிறிது பாதிக்கப்பட்டுள்ளது.

இரண்டாம் இணைப்பு

தம்பலகாமம் பிரதேச செயலகப் பகுதியில் இன்று (17) காலை பெய்த கனமழை உடனான கூடிய
காற்றினால் வீடுகளுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது.

தம்பலகாமம் பிரதேச பகுதியின் கல்மெடியாவ தெற்கு கிராம சேவகர் வடக்கு மற்றும் பாரதிபுரம் உட்பட பல இடங்களில் உள்ள வீடுகளின் கூரைகள் மற்றும் கட்டிடங்களும் பாதிக்கப்பட்டுள்ளதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.  

முதலாம் இணைப்பு

மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் வடமாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அடுத்த சில நாட்களில் மழையுடனான வானிலை எதிர்ப்பார்க்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பலத்த காற்றுடன் கூடிய மழையால் வீடுகளுக்கு சேதம் | Today Weather Forecast Meteorology Dept In Tamil

குறித்த விடயத்தை வளிமண்டலவியல் திணைக்களம் (Department of Meteorology) இன்று (17) வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

இதனடிப்படையில், மேல், சப்ரகமுவ, வடமேல் மற்றும் வடமாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பலத்த காற்று

அத்தோடு, மேல், சப்ரகமுவ, வடமேல், வடமத்திய மற்றும் வடமாகாணங்களில் சில இடங்களில் 75 மி.மீ.க்கு மேல் பலத்த மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பலத்த காற்றுடன் கூடிய மழையால் வீடுகளுக்கு சேதம் | Today Weather Forecast Meteorology Dept In Tamil  

வடமேல், வடமத்திய, தெற்கு மாகாணங்களிலும், திருகோணமலை மாவட்டத்திலும் அவ்வப்போது மணிக்கு 30-40 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது .

மேலும், இடியுடன் கூடிய மழை பெய்யும் போது தற்காலிகமாக உள்ளூர்மயமாக்கப்பட்ட பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கத்தால் ஏற்படும் சேதங்களைக் குறைக்க போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

GalleryGalleryGalleryGallery

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.