கொட்டாஞ்சேனை (Colombo 13) பகுதியில் பாடசாலை மாணவி ஒருவர் உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவத்தின் குற்றவாளி யார் என தமக்குத் தெரியும் என்று பாடசாலை நிர்வாகம் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி வீ.எஸ். நிரஞ்சன் தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம் (19.05.2025) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும் பல வழிகளில் விசாரணைகள் நடந்து கொண்டிருக்கும் இவ்வேளையில் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் சம்பவம் தொடர்பான ஆவணங்களையும், ஆதாரங்களையும் உரிய நிறுவனங்களுக்கு வழங்குமாறும் அவர் தெரிவித்தார்.
கொட்டாஞ்சேனை, கல்பொத்த வீதியில் உள்ள குடியிருப்பு வளாகமொன்றில் வசித்து வந்த 16 வயது மாணவி டில்ஷி அம்ஷிகா, கடந்த 29ஆம் திகதி அந்த வளாகத்தின் 6ஆவது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
அவர் கடுமையான மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், அதனால் தற்கொலை செய்து கொண்டதாக அவரது பெற்றோர் தெரிவித்தனர்.
பம்பலப்பிட்டியிலுள்ள பாடசாலையொன்றில் கல்வி கற்ற தனது மகளுக்கு, அங்கு பயிற்றுவிக்கும் ஆசிரியர் ஒருவர் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதாகவும், மற்றொரு சம்பவமாக தனியார் கல்வி நிறுவன உரிமையாளரால் மன அழுத்தத்திற்கு ஆளாக்கப்பட்டதாகவும் பெற்றோர் குற்றம் சாட்டியிருந்தனர்.
இந்நிலையில் குறித்த மாணவி ர் உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவத்தின் குற்றவாளி யார் என தமக்குத் தெரியும் என்று பாடசாலை நிர்வாகம் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி வீ.எஸ். நிரஞ்சன் ஊடகங்கள் முன்னிலையில் தெரிவித்துள்ளார்.
அவர் தெரிவித்த முழுமையான விடயங்களை கீழ் உள்ள இணைப்பில் காண்க….
https://www.youtube.com/embed/rgVdjkVpovs

