முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

வடக்கு – கிழக்கு எதிரணி எம்.பிக்களை சந்திக்கவுள்ள பிரதமர் ஹரிணி

பிரதமர் ஹரிணி அமரசூரியவுக்கும் வடக்கு – கிழக்கு மாகாணங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் எதிர்க்கட்சி நாடாளுமன்ற
உறுப்பினர்களுக்கும் இடையிலான சந்திப்பு ஒன்று இடம்பெறவுள்ளது. 

குறித்த சந்திப்பபானது, நாளைமறுதினம் (23.05.2025)
நடைபெறவுள்ளது.

வடக்கு மாகாணத்தில் உள்ள காணிகள் தொடர்பில் கடந்த மார்ச் மாதம் அரசால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் குறித்து எழுந்திருக்கும் பிணக்குகள் தொடர்பில் கலந்துரையாடும் நோக்கில் இந்த சந்திப்பு ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. 

அரச காணிகள் 

காணி நிர்ணய கட்டளைச் சட்டத்தின் 4ஆம் பிரிவின் கீழ் (28.03.2025) திகதியிடப்பட்டு, 2430 இலக்கமிடப்பட்டு பிரசுரிக்கப்பட்டிருக்கும் வர்த்தமானி
அறிவித்தலில் வடக்கு மாகாணத்தில் மொத்தமாக 5,940 ஏக்கர் காணிகளை 3
மாத காலத்துக்குள் எவரும் உரிமை கோராதுவிடின், அவை அரச காணிகளாகப்
பிரகடனப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வடக்கு - கிழக்கு எதிரணி எம்.பிக்களை சந்திக்கவுள்ள பிரதமர் ஹரிணி | Harini To Meet Opposition Mps From North And East

இந்த வர்த்தமானி அறிவித்தல்
தொடர்பில் கடுமையான எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ள தமிழ்த் தேசிய அரசியல்
கட்சிகளின் பிரதிநிதிகள், அதனை உடனடியாக திரும்ப பெறுமாறு அரசை
வலியுறுத்தியுள்ளனர்.

இவ்வாறானதொரு பின்னணியில் வடக்கு – கிழக்கு மாகாணங்களைப்
பிரதிநிதித்துவப்படுத்தும் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு நேற்று (20) பிரதமர் ஹரிணி அமரசூரியவினால் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டது. 

பிரதமரின் கடிதம் 

இந்த வர்த்தமானி அறிவித்தல் தொடர்பில் எழுந்திருக்கும்
முரண்பாடுகள் குறித்துக் கலந்துரையாடும் நோக்கில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை
(23) மு.ப. 11.00 மணி முதல் பி.ப. 1.00 மணிவரை நாடாளுமன்றத்தில் தனது
தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் சந்திப்பில் கலந்துகொள்ளுமாறு அழைப்பு
விடுக்கப்பட்டுள்ளது.

வடக்கு - கிழக்கு எதிரணி எம்.பிக்களை சந்திக்கவுள்ள பிரதமர் ஹரிணி | Harini To Meet Opposition Mps From North And East

“காணி நிர்ணயக் கட்டளைச் சட்டத்தின் பிரகாரம் வடக்கு மாகாணத்தின் காணிகளை
நிர்ணயம் செய்வதற்காக இலக்கம் 2430 மற்றும் (28.05.2025) திகதியிட்ட இலங்கை
ஜனநாயக சோசலிசக் குடியரசின் வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம் அந்த
மாகாணத்திலும், கிழக்கு மாகாணத்திலும் காணி நிர்ணயம் தொடர்பாக பிணக்குகள் எழுந்துள்ளன. 

குறித்துக் கலந்துரையாடுவதற்காக எதிர்வரும் வெள்ளிக்கிழமை (23)
மு.ப. 11.00 – பி.ப. 1.00 மணி வரை நாடாளுமன்றத்தின் குழு அறை 01 இல் எனது
தலைமையில் நடைபெறவுள்ள கலந்துரையாடலுக்கு உங்களது பங்கேற்பினை மிகவும்
கௌரவத்துடன் எதிர்பார்க்கின்றேன்” என்று அந்தக் கடிதத்தில் பிரதமர்
குறிப்பிட்டுள்ளார்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.