முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

தமிழர் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் மாணவி பலி: ரவிகரன் எம்.பி கண்டனம்

கருநாட்டுக்கேணிப்
பகுதியில் இன்று (21) இடம்பெற்ற விபத்திற்கு கொக்கிளாய் பொலிசாரின் அசமந்த போக்கே காரணமென வன்னிமாவட்ட நாடாளுமன்ற
உறுப்பினர் துரைராசா ரவிகரன் கடுமையாகச் சாடியுள்ளார்.

குறிப்பாக வீதிப்போக்குவரத்துப் பொலிஸார் பாடசாலைக்கு மாணவர்கள்
செல்லும்நேரத்தில் உரியநேரத்திற்கு கடமைக்கு வராமை மற்றும், அதி வேகத்துடன்
செல்லும் வாகனங்களின் வேகக்கட்டுப்பாடு குறித்து கொக்கிளாய் பொலிஸாார் கவனம்
செலுத்தாமையே இந்த விபத்து இடம்பெற காரணமாக அமைந்துள்ளதாகவும் நாடாளுமன்ற
உறுப்பினர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்தோடு கொக்கிளாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட, கொக்குத்தொடுவாய் பாடசாலைக்கு
அண்மித்த பகுதியில் சிலவருடங்களுக்கு முன்பு இடம்பெற்ற விபத்தில் மாணவர்
ஒருவர் உயிரிழந்த விடயத்தையும் அவர் இதன்போது மேலும் சுட்டிக்காட்டினார். 

பொலிஸாரின் அசமந்தப்போக்கு

இதுதொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

முல்லைத்தீவு கொக்கிளாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கருநாட்டுக்கேணிப் பகுதியில்,
பாடசாலைக்கு அண்மையில் இன்று இடம்பெற்ற விபத்தில் சிறுமியொருவர்
உயிரிழந்துள்ள சம்பவமொன்று பதிவாகியுள்ளது.

இவ்வாறு இடம்பெற்றுள்ள இந்த விபத்திற்கும், மாணவியின் உயிரிழப்பிற்கும்
பொலிஸாரே முழுப்பொறுப்பாகும். உரிய நேரத்தில் கடமையில் ஈடுபடாமையாலும்,
வேகக்கட்டுப்பாடின்றி செல்லும் வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்காமல்
அசமந்தப்போக்கோடு செயற்பட்டமையாலுமே இந்த விபத்தும், மாணவியுடைய உயிரிழப்பும்
இடம்பெற்றுள்ளது.

தமிழர் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் மாணவி பலி: ரவிகரன் எம்.பி கண்டனம் | Student Dies In Accident In Mullaitivu

இந்த விடயங்களில் கொக்கிளாய் பொலிஸார் முறையாக செயற்படவேண்டும். விபத்தில்
உயிரிழந்த மாணவிக்கு நீதி கிடைக்கவேண்டுமெனவும் கேட்டுக்கொகள்கிறேன்.

இந்த விடயத்தில் பொலிஸாரின் அசமந்தப்போக்கான செயற்பாடு தொடர்பிலும், உயிரிழந்த
சிறுமிக்கு நீதி கிடைக்கவும் உரிய தரப்பினரின் கவனத்திற்கு கொண்டு செல்வேன் எனத் தெரிவித்துள்ளார்.

மேலதிக தகவல்- சதீசன்

முதலாம் இணைப்பு

முல்லைத்தீவு- கருநாட்டுகேணி பகுதியில்  இடம்பெற்ற வாகன விபத்தில் பாடசாலை மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த விபத்தானது இன்று (21) காலை 7 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவத்தில் தரம் மூன்றில் கர்நாட்டுகேணி அ.த.க பாடசாலையில் கல்வி கற்கும் மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

உயிரிழப்பு

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், பாடசாலை மாணவி வீதிக்கு மறுபக்கத்தில் உள்ள கடை ஒன்றில் பனிஷ் ஒன்றை
வாங்கிவிட்டு சென்றபோது வீதியால் சென்ற கனரக வாகன மோதி விபத்தினை
ஏற்படுத்தியுள்ளது.

தமிழர் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் மாணவி பலி: ரவிகரன் எம்.பி கண்டனம் | Student Dies In Accident In Mullaitivu

காயமடைந்த மாணவி முல்லைத்தீவு மாவட்டம் மருத்துவமனையில்
அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்தினை ஏற்படுத்திய வாகனத்தின் சாரதியான புத்தளம் பகுதியினை சேர்ந்த நபரை கொக்கிளாய் பொலிஸ் கைது செய்துள்ளதுடன் குறித்த விபத்து தொடர்பிலான  மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

அதிவேகம்

அதிவேகம் காரணமாகவே குறித்த விபத்து இடம்பெற்றதாகவும்
ஆரம்ப கட்ட விசாரணையின் போது தெரியவந்துள்ளது.

தமிழர் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் மாணவி பலி: ரவிகரன் எம்.பி கண்டனம் | Student Dies In Accident In Mullaitivu

அத்தோடு பாடசாலை ஆரம்பிக்கும், முடிவடையும் வேளைகளில் குறித்த கர்நாட்டுக்கேணி பகுதியில் பொலிஸ் யாரும் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுவதில்லை எனவும் மக்கள் விசனம் தெரித்துள்ளனர்.

குறித்த விபத்தினை ஏற்படுத்திய சாரதியும் கடந்த இரண்டு வருடத்திற்கு முன் கொக்குதொடுவாய் பகுதியில் விபத்தினை ஏற்படுத்தி அதில் ஒருவர் உயிரிழந்திருந்ததாகவும் இன்றும் அதே சாரதியே குறித்த விபத்தினை ஏற்படுதியிருப்பதாகவும் அப்பகுதி மக்களால் கூறப்படுகின்றது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.