முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளி எடுத்த விபரீத முடிவு!

பொலன்னறுவை (Polonnaruwa) வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த ஒரு நோயாளி ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார். 

குறித்த சம்பவம் நேற்றைய (22.05.2025) தினம் இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். 

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், கடந்த 18ஆம் திகதி மாத்தளையில் (Matale) இருந்து வந்த 55 வயதுடைய இரு பிள்ளைகளின் தந்தையான குறித்த நபர், பொலன்னறுவை வைத்தியசாலையின் 18ஆவது வார்டில் அனுமதிக்கப்பட்டிருந்தார். 

மேலதிக விசாரணை

இவர் மூச்சுத்திணறல் மற்றும் சிறுநீரக நோய்க்கு சிகிச்சை பெறுவதற்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளி எடுத்த விபரீத முடிவு! | Patient Commits Suicide At Polonnaruwa Hospital

பொலன்னறுவை வைத்தியசாலையின் 23ஆவது வார்டில் 5 நாட்கள் சிகிச்சை பெற்று வந்த இவர் இன்று (22) பிற்பகல், தன்னிடம் வைத்திருந்த பழம் வெட்டுவதற்கு பயன்படுத்தப்படும் கத்தியை பயன்படுத்தி தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார். 

இந்த சம்கவம் தொடர்பில் வைத்தியசாலையின் காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவிக்கையில், நோயின் காரணமாக ஏற்பட்ட வலியை தாங்க முடியாமல் இவர் தவறான முடிவெடுத்ததாக சந்தேகிக்கப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்