முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

அவலத்தில் இருந்து மீண்ட தமிழ் மக்களுக்கு பேராறுதலாகும் கனடா: ரவிகரன் பெருமிதம்

இனப்படுகொலைக்குக் காரணமானவர்களை பொறுப்பேற்கச்செய்வதில் கனடா தொடர்ந்தும் ஆதரவளிக்கும் என்ற செய்தியானது அவலத்தில் இருந்து மீண்ட எமது மக்களை பேராறுதல் அடையச்செய்கின்றது என நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார்.

மேலும் கருத்து தெரிவித்த அவர், 

தமிழ் இனப்படுகொலைக்குக் காரணமானவர்களை பொறுப்பேற்கச்செய்வதிலும், உண்மை, நீதி கிடைப்பதற்கும் சர்வதேச அளவிலான முயற்சிகள் மற்றும், நடவடிக்கைகளுக்கு கனடா தொடர்ந்தும் ஆதரவளிக்கும் என்ற செய்தியானது அவலத்தில் இருந்து மீண்ட எமது மக்களை பேராறுதல் அடையச்செய்கின்றது.

கனடாவின் ஆதரவு

கனடாவின் ஆதரவுக்கரங்களை இறுகப் பற்றிக்கொள்கின்றோம். எமது மக்களுக்கான நீதியைப் பெற்றுத்தாருங்கள் என இவ்வுயரிய சபையிலிருந்து கனேடியப் பிரதமர் மார்க் கார்னியிடம் எம் மக்கள் சார்பாக கோரிக்கை விடுக்கின்றேன்.

அவலத்தில் இருந்து மீண்ட தமிழ் மக்களுக்கு பேராறுதலாகும் கனடா: ரவிகரன் பெருமிதம் | Embracing Canada S Supportive Arms

தமிழ் இன அழிப்பு விடயத்தில் கனடா எமக்கு ஆதரவுக்கரம் நீண்டியதை வரவேற்பதுடன், கனேடியப் பிரதமர் மார்க் கார்னி அவர்களுக்கும், பிரம்டன் நகரமேயர் பற்றிக் பிரவுண் அவர்களுக்கும் எனது இதயபூர்வமான நன்றிகளை மீண்டும் மீண்டும் தெரிவித்துக்கொள்கின்றேன்.

கனடாவின் பிரம்டன் நகரத்தில் சிங்க்கௌசி பூங்காவில், தமிழ்இனப் படுகொலையை நினைவுகூரும் வகையிலான தமிழ் இனஅழிப்பு, நினைவுத்தூபி கடந்த 10ஆம் திகதி பிரம்டன் நகரத்தின் மேயர் பற்றிக் பிரவுணால் திறந்து வைக்கப்பட்டது.

தமிழ் இனப்படுகொலை

இந்நிலையில் 16ஆண்டுகளாக தமிழ் இனப்படுகொலைக்கான நீதியைக்கோரிக்கொண்டு, காத்துக்கொண்டிருக்கும் எமது பாதிக்கப்பட்ட உறவுகளுக்கு கனடாவின் இச்செயற்பாடு புதிய தெம்பைத்தருவதாக அமைந்துள்ளது.

அவலத்தில் இருந்து மீண்ட தமிழ் மக்களுக்கு பேராறுதலாகும் கனடா: ரவிகரன் பெருமிதம் | Embracing Canada S Supportive Arms

நீதி கிடைக்குமா? என்று ஏங்கியிருக்கும் எமது உறவுகளுக்கு ஒரு நம்பிக்கையை தருவதாக உள்ளது.

இந்நிலையில் 16ஆம் ஆண்டு நினைவேந்தலுக்கு கனேடியப் பிரதமர் மார்க் கார்னி இரங்கல் தெரிவித்துள்ளார்.

தமிழ் சமூகத்தின் உணர்வுகளைப் புரிந்துகொண்டு எமது துயரில் பங்கேற்று ஆறுதல்சொன்ன கனேடியப் பிரதமர் மார்க் கார்னி அவர்களுக்கு வலிசுமந்த மக்களின் பிரதிநிதியாக இவ்வுயரியசபையில் தலைசாய்த்துக்கொள்கின்றேன்” என கூறியுள்ளார்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.