முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

2022 அரகலய ​​போராட்டகாரர்கள் மீது பாயப்போகும் சட்டம்!

2022 அரகலய ​​போராட்டம் தொடர்பான வழக்குகளில் சுமார் மூவாயிரத்திற்கும் மேற்பட்டோர் சந்தேக நபர்களாக பெயரிடப்பட்டுள்ளனர்.

இது தொடர்பான வழக்குகளைக் கையாளும் சட்டத்தரணிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் குழுவிற்கும், பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற அலுவல்கள் தொடர்பான பிரதி அமைச்சர் சட்டத்தரணி சுனில் வட்டகலவிற்கும் (Sunil Watagala) இடையே நடைபெற்ற கலந்துரையாடலின் போது இது தெரியவந்துள்ளது.

அத்துடன், குறித்த போராட்டத்தை அடிப்படையாகக் கொண்டு நடந்த சம்பவங்கள் தொடர்பான 661 வழக்குக் கோப்புகளை இலங்கை காவல்துறை பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

வழக்கு கோப்புகள்

அந்த வழக்கு கோப்புகளில் பெரும்பாலானவை ஆலோசனைக்காக சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் அதன்போது கூறப்பட்டுள்ளது.

2022 அரகலய ​​போராட்டகாரர்கள் மீது பாயப்போகும் சட்டம்! | Three Thousand Suspects Across The Country

இந்த கலந்துரையாடலின் போது, ​​கணிசமான எண்ணிக்கையிலான வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் யாரும் பெயரிடப்படவில்லை என்றும், காலி முகத்திடல் போராட்ட தளத்தை அடிப்படையாகக் கொண்டு 32 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

சட்டத்தரணிகளின் கோரிக்கை

இதேவேளை, போராட்டத்தில் சந்தேக நபர்களாகப் பெயரிடப்பட்டவர்களில் பெரும்பாலானோர் மீது, போராட்டம் நடத்தியதற்காக சட்டவிரோதக் கூட்டத்தில் உறுப்பினராக இருந்ததற்கான குற்றச்சாட்டு மட்டுமே உள்ளது என்பதும் தெரியவந்துள்ளது.

2022 அரகலய ​​போராட்டகாரர்கள் மீது பாயப்போகும் சட்டம்! | Three Thousand Suspects Across The Country

அத்தோடு, கலந்துரையாடலில் கருத்து வெளியிட்ட சட்டத்தரணிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள், இந்த வழக்குகள் தொடர்பான நடவடிக்கைகளை விரைவுபடுத்தமாறு நீதி அமைச்சிடம் கோரிக்கையையும் முன்வைத்துள்ளனர்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்