ஆனையிறவு உப்பளத்தில் பணியாற்றும் ஊழியர்கள் தொடர்ந்து 14ஆவது நாளாக இன்று போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
உப்பளத்திற்கு முன்னால் கொட்டகை அமைத்து பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இவர்கள் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.
உப்பளத்தின் முகாமையாளர் தங்களை தரக்குறைவாக பேசுவதாகவும், மனிதராகக் கூட பார்ப்பதில்லை என்றும், தங்களது கோரிக்கைகளுக்கு இதுவரை செவிசாய்க்கவில்லை என்றும் போராட்டக்காரர்கள் இதன்போது தெரிவித்தனர்.
மேலும், பல்வேறு சிரமங்களுக்கு மத்தியிலும் இந்த போராட்டம் தொடர்ந்து வருவதாகவும் போராட்டக்காரர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இங்கு அவர்கள் தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

