முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

அநுர அரசாங்கத்தில் உப்பு மோசடி!

கோட்டாபய ராஜபக்ச அரசாங்கத்தில் இடம்பெற்ற வெள்ளை சீனி மோசடியைப் போன்று தற்போது உப்பு மோசடி இடம்பெற்று வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர்  முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று(27.05.2025) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

மேலும் கருத்து தெரிவித்த அவர்,

உப்பு இறக்குமதி

அரச வர்த்தக கூட்டுத்தாபனத்தால் உப்பு இறக்குமதி செய்யப்பட்டு, அவற்றை சந்தைகளில் விநியோகிப்பதற்காக தனியார் நிறுவனத்திடம் வழங்கப்பட்டன.

அந்த நிறுவனங்களால் ஒரு கிலோ உப்பு 350 – 400 ரூபாவுக்கு வழங்கப்பட்டது.

அநுர அரசாங்கத்தில் உப்பு மோசடி! | Salt Fraud Anura Government

இலங்கையில் உப்பு ஒரு கிலோ 130 ரூபாவாகக் காணப்பட்டது. இந்தியாவிலிருந்து ஒரு மெட்ரிக் தொன் உப்பு 80 டொலருக்கு இறக்குமதி செய்யப்பட்டது.

அவ்வாறெனில் ஒரு கிலோ உப்பு இலங்கை விலைப்படி 24 ரூபாவாகும். ஆனால் ஒரு கிலோ உப்புக்கு 40 ரூபா இறக்குமதி வரி அறவிடப்படுகிறது.

இறக்குமதி செலவு

இறக்குமதி செலவை விட இரு மடங்குக்கும் அதிகமாக வரி அறவிடப்படுகிறது. போக்குவரத்து உள்ளிட்ட செலவுகளை உள்ளடங்கினாலும் ஒரு கிலோ உப்பினை ஆகக் குறைந்தது 100 ரூபாவுக்கு வழங்க முடியும்.

அநுர அரசாங்கத்தில் உப்பு மோசடி! | Salt Fraud Anura Government

ஆனால் சந்தைகளில் 350 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகிறது. அரசாங்கம் இறக்குமதி செய்து தனியார் கம்பனிகளுக்கு வழங்குகிறது.

தனியார் கம்பனிகள் அவற்றை 350 ரூபாவுக்கு விற்பனை செய்கின்றன. இது கோட்டாபய ராஜபக்ஷ அரசாங்கத்தில் இடம்பெற்ற வெள்ளை சீனி மோசடியைப் போன்றதாகும்.” என கூறழியுள்ளார்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்