சுன்னாகம் பகுதியில் ஐஸ் போதைப்பொருளுடன்
கைதான 26 வயதுடைய பெண்ணொருவர் புனர்வாழ்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
குறித்த கைது நடவடிக்கை சுன்னாகம் காவல்துறை பிரிவுக்குட்பட்ட பகுதியில் நேற்றையதினம் இடம்பெற்றுள்ளது.
மேலும் தெரியவருகையில்,
குறித்த பெண் நேற்றையதினம் 340 மில்லிகிராம் ஐஸுடன் கைது செய்யப்பட்டார்.
பின்னர் அவர் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட நிலையில் போதைப்பொருள்
பாவனைக்கு உள்ளானது தெரியவந்துள்ளது.
இந்நிலையில் அவரை மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்தியவேளை, அவரை 6
மாதங்களுக்கு புனர்வாழ்வுக்கு உட்படுத்துமாறு நீதிவான் உத்தரவிட்டார்.

