கொழும்பு – கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (Colombo Bandaranaike International Airport) வைத்து யாழ்ப்பாணத்தை (Jaffna) சேர்ந்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த கைது நடவடிக்கை நேற்றைய தினம் (28.05.2025) இடம்பெற்றுள்ளது.
டுபாயிலிருந்து நேற்று கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு வந்த விமானத்தில் தென்னாப்பிரிக்காவை சேர்ந்த விமான பணிப்பெண்ணொருவரை பாலியல் ரீதியாகத் துன்புறுத்த முயன்ற குற்றச்சாட்டில் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலதிக விசாரணை
கைது செய்யப்பட்ட நபர் டுபாயிலிருந்து எமிரேட்ஸ் விமானத்தில் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்த நிலையில் அவர் மதுபோதையில் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது, அவர் தென்னாப்பிரிக்காவை சேர்ந்த விமான பணிப்பெண்ணை பாலியல் ரீதியாக துன்புறுத்த முயன்றுள்ளார்.
இந்த நிலையில் அந்த பெண் உடனடியாக விமானிக்கு தகவல் வழங்கியதையடுத்து விமானம் உடனடியாக கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டுள்ளது.
இதன்போது யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 49 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்துள்ளனர்.
you may like this
https://www.youtube.com/embed/-b_Rt5tjit0

