அஞ்சல் தொழிற்சங்கங்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இன்று(29) பணிப்புறக்கணிப்பு நடவடிக்கையை முன்னெடுத்துள்ளன.
அந்த வகையில், இந்த தொழிற்சங்க போராட்டத்திற்கு ஆதரவு வழங்கும் வகையில்
கிண்ணியா பிரதான அஞ்சல் அலுவலக ஊழியர்களும் இன்று பணிப்புறக்கணிப்பை
மேற்கொண்டுள்ளனர்.

இதன் காரணமாக, கிண்ணியா பிரதான அஞ்சல் அலுவலகம் மூடப்பட்டிருந்ததால், அஞ்சல்
அலுவலகத்திற்கு சேவை பெறுவதற்காக வருகை தந்த பொதுமக்கள் ஏமாற்றத்துடன்
திரும்பிச் சென்றுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.





