இன்று காலைமுதல் மட்டக்களப்பு வாவிக்கரை வீதியிலுள்ள பிள்ளையானின் அலுவலம் விசேட அதிரடிப்படையினரால் முற்றுகையிடப்பட்டு, தீவிர தேடுதல் வேட்டை நடந்துகொண்டிருக்கின்ற நிலையில், அந்த அலுவலகத்தில் புதைத்துவைக்கப்பட்டிருந்த இரண்டு சடலங்கள் மீட்கப்பட்டதான ஒரு செய்தி மட்டக்களப்பு மக்கள் மத்தியில் பரவி வருகின்றது.
அலுவலகத்தின் நிலத்தின் கீழே இரண்டு பிணங்கள் மறைத்துவைக்கப்பட்டிருப்பதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையிலேயே சிறிலங்கா குற்றத்தடுப்பு புலனாய்வுப் பிரிவு மற்றும் விசேட அதிரடிப்படையினர் TMVP அலுவலகத்தில் தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டுவருவதாகவும் செய்திகள் வெளிவருகின்றன.
மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களில் TMVP அலுவலகங்களில் பலர் கொலைசெய்யப்பட்டு, அலுவலகங்களின் உள்ளேயே புதைக்கப்பட்டதான பல தகவல்களை முன்நாள் ரி.எம்.வி.பி. உறுப்பினர்கள் ஊடகங்களில் வெளியிட்டுவருகின்ற நிலையில், ஒரு வாகன ஓட்டுனர் உட்பட இரண்டு சடலங்கள் மட்டக்களப்பு TMVP அலுவகக் கட்டடத்தின் கீழ் புதைத்துவைக்கப்பட்டிருக்கலாம் என்ற தகவல் ஏற்கனவே தமது உறுப்பினர்கள் மத்தியில் உலவந்ததாக ஒரு முன்நாள் ரீ.எம்.வி.பி உறுப்பினர் தெரிவித்திருந்தார்.
மட்டக்களப்பு அலுவலகம் எதற்காகச் சுற்றிவளைக்கப்பட்டிருக்கின்றது என்றோ, இன்று முழுவதும் அங்கு என்ன தேடப்பட்டது, என்னென்ன கண்டுபிடிக்கப்பட்டன என்ற விபரங்களையோ காவல்துறையினர் இதுவரை வெளியிடவில்லை.
அப்படி இருக்கயில், அங்கு ஏற்கனவே புதைத்துவைக்கப்பட்ட சடலங்கள், எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளதாகவும், சட்டவிரோத ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டதாகவும், அலுவலகக் கட்டிடத்தின் அடியில் நிலக்கீழ் சுரங்கம் ஒன்று காணப்பட்டதாகவும் கூட பல செய்திகள், வதந்திகள் மக்கள் மத்தியில் பரவிக்கொண்டிருக்கின்றன.
அதேவேளை, மட்டக்களப்பில் TMVP போன்ற குழுக்களால் மேற்கொள்ளப்பட்டுவந்த ஆயுதக் கலச்சாரத்திற்கு எதிராக மீது காவல்துறை எடுத்துவருகின்ற இதபோன்ற நடவடிக்கைகளை மக்கள் பாராட்டியும் வருகின்றார்கள்.
https://www.youtube.com/embed/30QhB81zRLM

