இந்தியாவில் நடைபெறும் 72வது உலக அழகி போட்டியின் இறுதிப் போட்டி இன்று (31) ஹைதராபாத்தில் உள்ள HITEX கன்வென்ஷன் மையத்தில் நடைபெறவுள்ளது.
“மிஸ் வேர்ல்ட் 2025” கிரீடத்தை வெல்லும் நோக்கில் உலகம் முழுவதிலுமிருந்து 100க்கும் மேற்பட்ட அழகு ராணிகள் போட்டியிடுகின்றனர்.
ஒவ்வொரு கட்டமும் ஒரு மாதத்திற்கு வெவ்வேறு கருப்பொருள்களின் கீழ் நடைபெற்றது.
அனுதி குணசேகர
இந்த நிலையில், உலக அழகி இறுதிப் போட்டியானது, இலங்கை நேரப்படி இன்று மாலை 6.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.
மே 10 ஆம் திகதி முதல் நடைபெற்று வரும் இந்த ஆண்டு உலக அழகி தேர்வின்படி, 40 பெண்கள் அரையிறுதிச் சுற்றுக்குத் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
Anudi Gunasekara’s speech for #MissWorld2025
You’ve made Sri Lanka so proud! 🇱🇰❤️ pic.twitter.com/p2HhaYJmAW
— 𝒫𝒶𝓋𝓈𝓈 🧸ིྀ (@pavanaynay) May 21, 2025
இதன்படி, அவர்களில் 18 பேர் ஏற்கனவே அந்த வாய்ப்பைப் பெற்றுள்ளனர்.எனினும், இந்த 18 பேரில் இலங்கையை பிரிநிதித்துவப்படுத்தும் அனுதி குணசேகர இடம்பெறவில்லை.
கடந்த சில நாட்களாக ஒவ்வொரு கருப்பொருளின் கீழும் நடைபெற்ற நிகழ்வுகள் மூலம் அவர்கள் காட்டிய திறமைகளின் அடிப்படையில் இந்த 18 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
எவ்வாறாயினும், இன்றைய போட்டியில் அனுதியின் செயல்திறனால் அவர் காலிறுதிக்கு தேர்ந்தெடுக்கப்படுவாரா இல்லையா என்பது தீர்மானிக்கப்படும்.
இறுதி ஐந்து பேர்
அரையிறுதிப் போட்டிகளில், ஒவ்வொரு பகுதியிலிருந்தும் 10 போட்டியாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

அவர்களில் இறுதியாக ஐந்து பேர் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். அந்த ஐவரிலிருந்து உலகின் மிகவும் எதிர்பார்க்கப்படும் உலக அழகி தேர்ந்தெடுக்கப்படுவார்.
2016 ஆம் ஆண்டு உலக அழகி பட்டத்தை வென்ற ஸ்டெஃபனி டெல் வாலே மற்றும் மூத்த இந்திய அறிவிப்பாளர் சச்சின் கும்பர் ஆகியோர் இப்போட்டியை தொகுத்து வழங்குவார்கள்.

