யாழ். அச்சுவேலி பகுதியில் பெண் தலைமைத்துவ குடும்பம் ஒன்று
வாழ்வாதாரத்துக்காக வளர்த்து வந்த கோழிகளுக்கு விஷம் வைத்ததால் பல கோழிகள்
உயிரிழந்துள்ளன.
நேற்றுமுன்தினம் வெள்ளிக்கிழமை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
முட்டையிடும் கோழிகளுக்கே விஷம் வைப்பு
கூட்டில் அடைத்து வைக்கப்பட்டிருந்த முட்டையிடும் கோழிகளுக்கே இவ்வாறு விஷம்
வைக்கப்பட்டது. இது குறித்து அச்சுவேலி காவல்நிலையத்தில் முறைப்பாடு ஒன்றும்
பதிவு செய்யப்பட்டது.

வளலாய் மேற்கு,
அச்சுவேலி (ஜே/284) பகுதியில் வசித்து வந்த பெண் தலைமைத்துவ குடும்பத்தின்
வாழ்வாதரமே இவ்வாறு நாசம் செய்யப்பட்டுள்ளது. இதனால் 97 கோழிகள்
உயிரிழந்துள்ளதுடன் இன்னும் பல கோழிகள் உடல்நலம் குன்றிய நிலையில்
காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
அச்சுவேலி காவல்துறையினர் விசாரணை
குறித்த கோழிகளையே வாழ்வாதாரமாக நம்பி வாழ்க்கையை நடாத்தி வரும் குடும்பமானது
இந்த சம்பவத்தால் நிர்க்கதியாகியுள்ளது.

இது குறித்து அச்சுவேலி காவல்துறையினர்
விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

