கொழும்பிலிருந்து (Colombo) – யாழ்ப்பாணம் (Jaffna) வரையான
மக்கள் போக்குவரத்துக்கான விமான சேவைகளை ஆரம்பிப்பதற்கு டேவிட் பீரிஸ் ஏவியேஷன் (DP Aviation) திட்டமிட்டுள்ளது.
இதற்காக இலங்கை சிவில் விமான போக்குவரத்து அதிகார சபையின் பரிசோதிப்பவர்களின்
மேற்பார்வையின் கீழ் நேற்று (02) விசேட கண்காணிப்பு விமான பயணத்தினை இரத்மலானை
விமான நிலையத்திலிருந்து (Ratmalana Airport) யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் வரை
மேற்கொண்டுள்ளது.
குறித்த விமான சேவை தொடர்பில் கருத்து வெளியிட்ட டேவிட் பீரிஸ் விமான சேவைகள் நிறுவனத்தின் விமானி, “இந்த விமான சேவையினை வாராந்தம் மூன்று நாட்கள் ஆரம்பிப்பதற்கு தீர்மானித்துள்ளோம்.
பயண நேரம்
இருவழி கட்டணமாக 68,000 ரூபா அறவிடப்படுவதுடன் ஏழு கிலோ கிராம் பயணிகள் பொதி அனுமதிக்கப்படும் அதேவேளை 11 பயணிகள் இந்த சேவையின் மூலம் பயணம் செய்ய முடியும்.
கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்திற்கான பயண நேரமானது ஒரு வழிப் பயணத்துக்கு 1 மணித்தியாலம் 10 நிமிடம் தேவைப்படும்” என தெரிவித்துள்ளார்.

அத்துடன் இங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த இலங்கை விமான சேவைகள் அதிகார சபை தலைமை
அதிபதி கப்டன் தமிந்த றம்புக்வெல, ”குறிப்பாக இரண்டு வருடங்களின் பின்னர் இந்த சேவை ஆரம்பிக்கப்படுகிறது.
எமது
நோக்கம் இலங்கைக்குள் உள்நாட்டு விமான சேவைகளை வளர்ப்பதாகும். அதன் அடிப்படையில் டேவிட் பீரிஸ் குடும்பத்தினரால் முன்வைக்கப்பட்ட
கோரிக்கைக்கு அமைவாக இன்று தகுதிகாண் சேவை பரிசோதிக்கப்பட்டது. இதற்கமைவாக அனைத்து பரிசோதனை நடவடிக்கைகளிலும் டேவிட் பீரிஸ் விமான சேவைகள்
சித்தி பெற்றுள்ளது.
டேவிட் பீரிஸ் விமான சேவைகள்
இதேவேளை கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து சேவைகளை ஆரம்பிப்பதற்கான
கட்டுமாணங்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் பூர்த்தி செய்யப்பட்டு
கொண்டிருக்கின்றது.

டேவிட் பீரிஸ் விமான சேவைகள் நிறுவனம் தமது சேவைக்கான கோரிக்கையை
விண்ணப்பிக்கும் பட்சத்தில் நாங்கள் அதனை அனுமதிப்பதற்கு தயாராக
இருக்கின்றோம்.
இதேவேளை எதிர்காலத்தில் பலாலி விமான நிலையத்தின் ஊடாக எந்த ஒரு நாட்டிற்கும்
இந்த விமான சேவையின் ஊடக பயணித்து தாங்கள் விரும்பிய சேவையின் மூலம்
பயணிப்பதற்கு இந்த சேவை பயன்படும்” என அவர் மேலும் தெரிவித்தார்.
https://www.youtube.com/embed/FBgcAlkhpOc

