இன்று எரிபொருளால் கிடைக்கும் இலாபம் யாருடைய சட்டைப் பைக்குள் செல்கிறது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பிரேம்நாத் சி தொலவத்த கேள்வியெழுப்பினார்.
கொழும்பில் (colombo) நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
கடந்த அரசாங்கத்தில் எரிபொருட்களால் கிடைக்கும் இலாபத்தில் ஒரு பகுதி அப்போதைய அமைச்சர் கஞ்சன விஜேசேகரவின் (Kanchana Wijesekera) சட்டைப் பைகளுக்குள் செல்வதாக தேசிய மக்கள் சக்தி குற்றஞ் சுமத்தியது.
உலக சந்தையில் எரிபொருள் விலை
ஆனால் இன்று உலக சந்தையில் எரிபொருள் விலை குறைவடைந்துள்ள போதிலும், இலங்கையில் விலைகளில் எவ்வித மாற்றமும் ஏற்படவில்லை.

அவ்வாறெனில் இப்போது கிடைக்கும் இலாபம் யாருடைய சட்டைப் பைக்குள் செல்கிறது?
அன்று உண்மையைக் கூறியிருந்தால், இன்று அரசாங்கத்துக்கு இந்த நிலைமை ஏற்பட்டிருக்காது.
அன்றைய அரசாங்கத்தில் முக்கிய பதவிகளில் இருந்தவர்கள் தான் இன்றும் இந்த அரசாங்கத்துக்கு உதவுகின்றனர்.
தமது ஆட்சியில் சிறையில் அடைக்கப்படுவார்கள் எனக் கூறிய நிதி அமைச்சின் செயலாளரும், மத்திய வங்கி ஆளுநரும் இன்றி இந்த அரசாங்கத்தால் எந்த தீர்மானத்தையும் எடுக்க முடியாது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பிரேம்நாத் சி தொலவத்த கேள்வியெழுப்பினார்.

