முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

யாழ். மாணவி கிருசாந்தி படுகொலை வழக்கில் நீதிமன்றின் அதிரடி தீர்ப்பு

பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட மாணவி கிருசாந்தி குமாராசுவாமி வழக்கில் தண்டனை வழங்கப்பட்ட ஐவர் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மீறல்மனுவை உயர்நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

குறித்த மனுவை உயர்நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் அடங்கிய குழு இன்று (03) ஏகமனதாக நிராகரித்துள்ளதுடன் மேன்முறையீடு செய்வதற்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

முதல் குற்றவாளியான சோமரட்ண ராஜபக்ச உட்பட தண்டனை வழங்கப்பட்டுள்ள ஐவர் தாங்கள் பல வருடங்களாக மரணதண்டனை கைதிகளாக உள்ளனர் என தெரிவித்து அடிப்படை உரிமை மீறல் மனுவை தாக்கல் செய்திருந்தனர்.

சிறைச்சாலை ஆணையாளர் நாயகம்

தங்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்படாவிட்டால் பொதுமன்னிப்பை வழங்கவேண்டும் அல்லது தங்களுக்கு விதிக்கப்பட்ட தண்டனையை ஆயுள்தண்டனையாக மாற்றவேண்டும் என அவர்கள் தங்கள் மனுவில் தெரிவித்திருந்தனர்.

யாழ். மாணவி கிருசாந்தி படுகொலை வழக்கில் நீதிமன்றின் அதிரடி தீர்ப்பு | Krishanthi Kumaraswamy Murder Case Criminals

ஜனாதிபதி சட்டத்தரணி மனோகர டிசில்வா குற்றவாளிகளின் சார்பில் அடிப்படை உரிமை மீறல் மனுவை தாக்கல் செய்திருந்தார்.

மரணதண்டனை விதிக்கப்பட்டு நீண்டகாலமாக சிறையில் அடைக்கப்படுவது கொடுரமானது மனிதாபிமானமற்றது என தங்கள் மனுவில் தெரிவித்திருந்த அவர்கள் இது தங்கள் அடிப்படை உரிமைகளை மீறுகின்றது என குறிப்பிட்டிருந்தனர்.

இந்தநிலையில் சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் சார்பில் முன்னிலையாகிய சிரேஸ்ட பிரதி சொலிசிட்டர் ஜெனரல் இந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ள விடயங்கள் குறித்து கடும் ஆட்சேபனைகளை முன்வைத்தார்.

 ஜனாதிபதியின் விருப்பம்

பொதுமன்னிப்பு வழங்குவது என்பது முற்றுமுழுதாக ஜனாதிபதியின் விருப்பமே எந்தவொரு குற்றவாளியும் அதனை சட்டபூர்வ உரிமையாக கருதமுடியாது என அவர் தெரிவித்தார்.

யாழ். மாணவி கிருசாந்தி படுகொலை வழக்கில் நீதிமன்றின் அதிரடி தீர்ப்பு | Krishanthi Kumaraswamy Murder Case Criminals

அதன்படி, இந்த மனு காலக்கெடுவிற்கு உட்பட்டது என்றும் மனுதாரர்கள் நல்லெண்ணத்தை உருவாக்கும் விதத்தில் செயற்படவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.

இந்த ஆட்சேபனையை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் குழுவினர் குறித்த மனுவை நிராகரிக்க தீர்மானித்தமை குறிப்பிடத்தக்கது.

1990களின் பிற்பகுதியில் நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய கிருஷாந்தி குமாரசாமி வழக்கு, ஒரு பாடசாலை மாணவி மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் மூவரை இராணுவத்தினர் கடத்தி, பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்ததை உள்ளடக்கியதாகும்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.