முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

யாழில் பல இலட்சத்திற்கு ஏலம் போன ஒரு மாம்பழம்..! எவ்வளவு தெரியுமா

யாழில் (Jaffna) பிரசித்தி பெற்ற முருகன் ஆலயமொன்றில் நடைபெற்ற மாம்பழத் திருவிழாவின்
மாம்பழம் பல இலட்சங்களில் ஏலம் போயுள்ளது.

இந்த ஏலம் யாழ்ப்பாணம் வண்ணார் பண்ணை தாமரை வீதியில் அமைந்துள்ள வண்ணை கோட்டையம்பதி
சிறிசிவசுப்பிரமணியர் ஆலயத்திலே இடம்பெற்றுள்ளது.

குறித்த ஆலயத்தில் 15 நாட்கள் திருவிழா நடைபெற்று வருகிற நிலையில் எட்டாம்
நாளான நேற்று மாம்பழத் திருவிழா வெகு சிறப்பாக நடைபெற்றது.

ஆலய நிர்வாக சபை

இந்த மாம்பழத் திருவிழா நிறைவடைந்த பின்னராக முருகனின் மாம்பழம் ஆலய நிர்வாக
சபையினரால் ஏலம் விடப்பட்டிருந்தது.

யாழில் பல இலட்சத்திற்கு ஏலம் போன ஒரு மாம்பழம்..! எவ்வளவு தெரியுமா | Mango Auctioned At Famous Murugan Temple In Jaffna

இதன்போது உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் இருந்தும் ஆலயத்திற்கு வந்திருந்த
அடியவர்கள் குறித்த மாம்பழத்தை வாங்கும் நோக்கில் ஏலத்தில் ஈடுபட்டனர்.

இதனால் மாம்பழத்தின் விலையும் உயர்ந்து கொண்டு சென்றது. இவ்வாறு பல
இலட்சங்களையும் தாண்டி மாம்பழம் ஏலம் எடுக்கப்பட்டது.

மாம்பழத்தை ஏலத்தில்

இதன்போது வெளிநாட்டில் அதாவது பிரான்ஸ் நாட்டில் இருந்து வந்திருந்த அ.அகிலன்
எனும் அடியவர் நான்கு இலட்சத்து அறுபதினாயிரம் (460,000) ரூபாவிற்கு இந்த
மாம்பழத்தை ஏலத்தில் எடுத்திருந்தார்.

யாழில் பல இலட்சத்திற்கு ஏலம் போன ஒரு மாம்பழம்..! எவ்வளவு தெரியுமா | Mango Auctioned At Famous Murugan Temple In Jaffna

இதன் போது ஆலய நிர்வாக சபையினரால் ஏனைய சில பொருட்களும் ஏலத்தில்
விடப்பட்டிருந்த நிலையில் அதனையும் அடியவர்கள் ஏலத்தில் வாங்கியிருந்தமையும்
குறிப்பிடத்தக்கது.

மேலும் குறித்த ஆலயத்தின் 15 நாள் திருவிழாவின் தொடராக எதிர்வரும்
ஞாயிற்றுக்கிழமை தேர்த் திருவிழாவும் திங்கட்கிழமை தீர்த்த திருவிழாவும்
மறுநாள் செவ்வாய்க்கிழமை பூங்காவனத் திருவிழாவும் புதன்கிழமை வைரவர் உற்சவமும்
இடம்பெற்று திருவிழா நிறைவடைய உள்ளது. 

யாழில் பல இலட்சத்திற்கு ஏலம் போன ஒரு மாம்பழம்..! எவ்வளவு தெரியுமா | Mango Auctioned At Famous Murugan Temple In Jaffna

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்