ஜனநாயகன்
ஹெச். வினோத் இயக்கத்தில் விஜய் நடிப்பில் தற்போது உருவாகி வரும் திரைப்படம் ஜனநாயகன். இது விஜய்யின் கடைசி படம் என்பதால் ரசிகர்கள் மத்தியில் இப்படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு இருக்கிறது.
இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ, பாபி தியோல், கவுதம் மேனன், நரேன் என ஒரு நட்சத்திர கூட்டமே நடித்து வருகிறார்கள்.
இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அனிருத் இசையமைப்பில் உருவாகும் இப்படத்தை கே.வி.என் நிறுவனம் தயாரித்து வருகிறார்கள்.
படமானது ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகவிருக்கிறது.


இணையத்தில் வைரலாகும் VJ அஞ்சனாவின் கண்கவரும் லேட்டஸ்ட் ட்ரெண்டி ஸ்டில்கள்
ஹேப்பி நியூஸ்
இந்நிலையில், இப்படம் குறித்து ஒரு அதிரடி தகவல் கிடைத்துள்ளது. அதாவது, இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவை இதுவரை விஜய் படங்களுக்கு நடக்காத அளவுக்கு நடத்த படக்குழு திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது.

