முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

தலைவரின் ஆயுதங்களை நாட்டுக்குள் இறக்கிய அநுர..! அர்ச்சுனாவால் வெடித்தது சர்ச்சை

2009 ஆம் ஆண்டுக்கு முன்னர் தலைவர் பிரபாகரன் தாய்லாந்தில் இருந்து கொண்டுவருவதற்கு தயாராக வைத்திருந்த ஆயுதங்களை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தற்போது கொள்கலன்கள் மூலம் நாட்டுக்கு கொண்டு வந்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் தெரிவித்தார்.

இன்றைய நாடாளுமன்ற அமர்வின் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டார்.

அத்துடன், ஜெர்மனியில் உள்ள தனது புலம்பெயர் மக்களும் மிகுதியான ஆயுதங்கள் அனைத்தையும் குறித்த கொள்கலன்கள் மூலம் அண்மையில் கொண்டு வந்துள்ளதாக தெரிவித்ததாக கூறியுள்ளார்.

மரண அச்சுறுத்தல்

அதன்போது அவர் மேலும் தெரிவித்ததாவது, “சில மாதங்களுக்கு முன்பு 323 கொள்கலன்கள் வெளியே சென்றதாக ஒரு செய்தி வெளியானது. இப்பொழுது இதை சொன்னால் என் மீது துப்பாக்கிச் சூடு நடத்தவும் வாய்ப்பு உண்டு, எனக்கு பாதுகாப்பும் வழங்கப்பட்டில்லை, இருந்தாலும் இதை சொல்லியே ஆகவேண்டும்.

தலைவரின் ஆயுதங்களை நாட்டுக்குள் இறக்கிய அநுர..! அர்ச்சுனாவால் வெடித்தது சர்ச்சை | Prabhakaran Weapons Archchuna Accusation Today

தேர்தலுக்கு முன்பதாக எமது ஜனாதிபதி ஜெர்மனுக்கு சென்று புலம்பெயர்தோரை சந்தித்தார். அப்போது, இந்த நாட்டில் செய்ய முடியாத பல காரியங்களை செய்வதாக உறுதியளித்தார்.

தாய்லாந்தில் இருந்த கொள்கலன்களில் பிரபாகரனுடைய பொருட்கள் தான் இருந்தது. இதை நான் உறுதியாகவும் பயப்படாமலும் சொல்கிறேன், இதன் பின்னர் எனக்கு மரண அச்சுறுத்தல் வரலாம். ஆனாலும் எனக்கு பயமில்லை.

எஞ்சிய ஆயுதங்கள்

2009 ஆம் ஆண்டுக்கு முன்னர் பிரபாகரன் கொண்டு வரவிருந்த பொருட்கள் தாய்லாந்தில் மிச்சமிருந்த நிலையில் அந்த பொருட்களை குமரன் பத்மநாதன் எனப்படும் கே.பி மூலமாக இலங்கைக்கு கொண்டுவந்துள்ளார்.இப்படி தான் மக்கள் பேசிக்கொள்கின்றார்கள்.

தலைவரின் ஆயுதங்களை நாட்டுக்குள் இறக்கிய அநுர..! அர்ச்சுனாவால் வெடித்தது சர்ச்சை | Prabhakaran Weapons Archchuna Accusation Today

ஜெர்மனியில் உள்ள புலம்பெயர் குழுவினர் எனக்கும் தொடர்பு கொண்டு இந்த விடயம் பற்றி கூறினார்கள். இறுதியாக எஞ்சிய ஆயுதங்களை அந்த கொள்கலன்களில் தான் கொண்டுவந்துள்ளனர்.

ஆனால் என்னால் இதை நிரூபிக்க முடியாது, ஆனால் நான் பொறுப்புடன் தான் சொல்கின்றேன்.

அந்த 323 கொள்கலன்களிலும் எங்கள் பிரபாகரனுடைய ஆயுதங்களே இருந்துள்ளது, இதனை நான் பொறுப்புடன் கூறுகின்றேன். ” என்றார்.

You may like this…

https://www.youtube.com/embed/5-7WT21fiXA

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.