தொடருந்து பயணத்தின் போது மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு உதவி வழங்கும் புதிய முயற்சி மேற்கொள்ளப்படவுள்ளது.
இது தொடர்பான அறிவிப்பை தொடருந்து திணைக்களம் இன்று(08) வெளியிட்டுள்ளது.
இந்த திட்டத்தின் கீழ் மாற்றுத்திறனாளி பயணிகள் தொடருந்துகளில் ஏறும்போதும் இறங்கும்போதும் தொடருந்து திணைக்கள ஊழயர்கள் உதவுவார்கள்.
நடைமுறையாகும் திகதி
குறித்த உதவியைப் பெற, பயணிகள் 1971 என்ற அவசர இலக்கத்திற்கு அழைத்து முன்கூட்டியே திணைக்கள அதிகாரிகளுக்குத் தெரிவிக்க வேண்டும்.

இதன்படி, புதிய உதவி திட்டம் ஜூன் 15 ஆம் திகதி முதல் உத்தியோகபூர்வமாக செயல்படுத்தப்படும்.

