யாழ்.காங்கேசன்துறை தொடருந்து நிலையத்தில் – பொதிகள் போக்குவரத்து சேவை நேற்று ஆரம்பித்து வைக்கப்பட்டது.
நூலகம் திறந்து வைப்பு
அத்தோடு தொடருந்து நிலையத்தில் பயணிகள் ஓய்வு அறையில் நூலகம் ஒன்றும் திறந்து
வைக்கப்பட்டுள்ளது.

இதன்போது தொடருந்து நிலைய வளாகத்தில் மரக்கன்றுகளும் நடப்பட்டுள்ளன.
குறித்த நிகழ்வில், போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப்
போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க, கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம்
சந்திரசேகர், மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் குமார ஜெயக்கொடி, தேசிய
மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான கருணைநாதன் இளங்குமரன்,
சண்முகநாதன் ஸ்ரீபவானந்தராஜா, ஜெயசந்திரமூர்த்தி ரஜீவன், புகையிரத நிலைய
அதிகாரிகள் என பலர் கலந்துகொண்டுள்ளனர்.

