பொருளாதார மற்றும் வர்த்தக ஒத்துழைப்பை வலுப்படுத்தும் வகையில், சீனாவும்
இலங்கையும் இரண்டு முக்கிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளன.
எட்டாவது கூட்டம்
கொழும்பில் நடைபெற்ற சீன – இலங்கை கூட்டு வர்த்தக மற்றும் பொருளாதார ஆணையகத்தின்
எட்டாவது கூட்டத்தின் போது, இந்த ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டன.
வர்த்தக பணிக்குழு ஒன்றை நிறுவுதல் மற்றும் தொழில்துறை மற்றும் விநியோகச்
சங்கிலி ஒத்துழைப்பை மேம்படுத்துதல் என்பன தொடர்பிலேயே இந்த ஒப்பந்தங்கள்
அமைந்துள்ளன.

கலந்துரையாடப்பட்ட விடயங்கள்
சீன வர்த்தக அமைச்சர் வாங் வென்டாவோ மற்றும் இலங்கையின் வர்த்தக அமைச்சர்
வசந்த சமரசிங்க ஆகியோர் கூட்டத்திற்கு தலைமை தாங்கினர்.
இந்தக்கூட்டத்தில், சீனாவின் பட்டுப்பாதை முன்முயற்சி ஒத்துழைப்பை
மேம்படுத்துதல், வர்த்தகம் மற்றும் முதலீட்டை அதிகரித்தல் உட்பட்ட விடயங்கள்
கலந்துரையாடப்பட்டன.

