முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

உகந்தை மலையில் முளைத்த புத்தர் சிலை : உறுதிப்படுத்திய சிவில் சமூக செயற்பாட்டாளர்கள்

Courtesy: கஜானா சந்திரபோஸ்

உகந்தை மலை சுற்றுச் சூழலில் கடற்கரையோரம் உள்ள மலையொன்றில் புதிதாக வைக்கப்பட்டுள்ள புத்தர் சிலை தொடர்பில் எழுந்துள்ள சர்ச்சை குறித்து கள விஜயம் மேற்கொண்ட நிலையில் புதிதாக புத்தர் சிலை வைக்கப்பட்டுள்ளதை தாயக செயலணி சிவில் சமூக அமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் செல்வக்குமார் உறுதிப்படுத்தியுள்ளார்.

குறித்த விடயம் தொடர்பில் அம்பாறை மாவட்ட சிவில் செயற்பாட்டாளர் த.பிரதீபனால் வெளிக்கொணரப்பட்டதைத் தொடர்ந்து குறித்த விடயம் கிழக்கு மாகாணத்தின் பேசுபொருளாக அமைந்திருந்தது.

இது தொடர்பில் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் க.கோடீஸ்வரன் (K. Kodeeswaran) இவ்வாறு உகந்தை மலை வளாகத்தில் எவ்வித புத்தர் சிலைகளும் வைக்கப்படவில்லை என்றவாறாக கருத்து வெளியிட்டிருந்தார்.

 உகந்தை மலை முருகன் கோவில்

இந்த நிலையிலே அதன் உண்மைத் தன்மையினைக் கண்டறியும் நோக்கில் மட்டக்களப்பு சிவில் சமூக அமைப்பான தாயக செயலணி அமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் செல்வக்குமார் தலைமையில் உறுப்பினர்கள் மற்றும் அம்பாறை மாட்ட சிவில் செயற்பாட்டாளர்கள் சிலர் நேற்றைய தினம் உகந்தை மலை முருகன் கோவிலுக்கு விஜமொன்றினை மேற்கொண்டிருந்தனர்.

உகந்தை மலையில் முளைத்த புத்தர் சிலை : உறுதிப்படுத்திய சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் | Buddha Statue Near Ukanthai Malai Murugan Kovil

மேலும் இது குறித்து ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த செல்வகுமார், “உகந்தை முருகன் ஆலயத்திற்குச் சென்று அதன் முகாமையாளரைச் சந்தித்து இது தொடர்பில் வினவிய போது அவர்களினால் இந்த விடயம் தொடர்பில் எவ்வித கருத்தும் கூற முடியாது எனவும் வண்ணக்கருடன் தொடர்புகொள்ளுமாறு தெரிவித்தார்.

அந்த அடிப்படையில் எமது குழுவினர் சிலை அமைக்கப்பட்டிருந்த பிரதேசத்திற்குச் சென்று பார்வையிட்டோம்.

குறித்த பிரதேசம் கடற்படையினரின் பூரண கட்டுப்பாட்டுக்குள் இருப்பதனால் இந்த மலையில் ஏறி புத்தர் சிலையைப் பரிசீலிக்கும், புகைப்படம் எடுக்கும் நிலைமைகள் அங்கு இல்லை.

இருப்பினும் குறித்த விடயம் தொடர்பில் கடற்படை முகாமின் அதிகாரிகளுடன் கலந்துரையாடல் மேற்கொள்ள முயற்சித்த போது அது கைகூடவில்லை.

இந்த வருடம் வைக்கப்பட்ட புத்தர் சிலை

எனினும் ஒரு அதிகாரியிடம் இது தொடர்பில் கலந்துரையாடிய போது இதற்கும் கடற்படையினருக்கும் எதுவித தொடர்பும் இல்லை அருகாமையில் உள்ள குடும்பிமலை தேரரினாலேயே இது வைக்கப்பப்டதெனவும் உத்தியோகப்பற்றற்ற முறையில் தெரிவிக்கப்பட்டு பூரண விளக்கத்திற்கு உயர் அதிகாரியையே தொடர்பு கொள்ள வேண்டும் எனவும் கூறப்பட்டது.

அதனைத் தொடர்ந்து குறித்த விடயத்தினை உகந்தை மலைக்கு வருகை தந்திருக்கும் கதிர்காம யாத்திரிகர்களுடன் கலந்துரையாடும் முகமாக முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

உகந்தை மலையில் முளைத்த புத்தர் சிலை : உறுதிப்படுத்திய சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் | Buddha Statue Near Ukanthai Malai Murugan Kovil

அந்த அடிப்படையில் பல ஆண்டு காலமாக பாதயாத்திரை மேற்கொள்ளும் அடியவர்கள் சிலரிடம் வினவப்பட்டது. இதன்போது அவர்கள் இவ்வருடமே தாங்கள் இந்த புத்தர் சிலையை இங்கு காண்பதாகவும் இதற்கு முன்பு நாங்கள் பல தடவைகள் பாதயாத்திரை மேற்கொண்டு இங்கு வந்துள்ளோம் ஆனால் இவ்வாறு எந்த சிலைகளும் இங்கு இருக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.

பின்னர் இங்கு 14 வருட காலமாக வெற்றிலை விற்கும் அம்மாவிடம் குறித்த குழுவினர் கலந்துரையாடிய போது அவரிடமிருந்தும் இத்தகைய பதிலே கிடைத்தது.

தொடர்ந்து குழுவினர் கடற்கரையில் வாடி அமைத்து மீன்பிடி தொழிலை மேற்கொள்பவர்களிடம் குறித்த விடயம் தொடர்பில் கலந்துரையாடினர். இது தொடர்பில் அவர்கள் தெரிவிக்கையில், “இங்கு இதுவரை காலமும் எந்த சிலையும் இருக்கவில்லை சுமார் இரண்டு மூன்று வாரங்களுக்கு முன்பே குறித்த சிலை இங்கு நிறுவப்பட்டுள்ளது.

பறக்கவிடப்பட்ட பௌத்த கொடி

முதலில் மலையில் ஒரு வெள்ளைக் கொடியே பறக்க விடப்பட்டது, பின்னர் பௌத்த கொடி பறக்கவிடப்பட்டு ஒரு சில நாட்களில் புத்தர் சிலை இங்கு அமைக்கப்பட்டுள்ளது. இது முழுக்க முழுக்க கடற்படையினராலேயே முன்னெடுக்கப்பட்ட விடயம் எனவும் அவர்கள் தெரிவித்தனர்.

மேலும் குறித்த ஆலயத்தில் வள்ளிமலையில் முருகன் சிலை வைப்பதற்கு மேற்கொள்ளப்பட்ட நிர்மாணிப்பு வேலைகளை தொல்பொருள் திணைக்களம், வன இலாகா உள்ளிட்ட திணைக்களங்கள் தலையீடு செய்து தடுத்து நிறுத்தியது.

உகந்தை மலையில் முளைத்த புத்தர் சிலை : உறுதிப்படுத்திய சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் | Buddha Statue Near Ukanthai Malai Murugan Kovil

ஆனால் இவ்வாறான புத்தர் சிலைகள் அமைப்பதற்கு மாத்திரம் எவ்வித திணைக்களங்களும் தடை விதிப்பதில்லை. இது ஒரு மதசார்பான செயற்பாடாகவே இத்திணைக்களங்களால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்த நிலைமைகள் தொடர்பில் ஆராய்ந்துள்ள குழுவினர் அடுத்த கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளும் முகமான கலந்துரையாடல்களினூடாக இவ்வாறான மத ரீதியான சிதைப்புகளை நிறுத்துவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்கத் தீர்மானித்துள்ளதாக தெரிவித்தனர்.

இதேவேளை கடந்த கால அரசாங்கங்கள் போன்றே தற்போதைய இந்த தேசிய மக்கள் சக்தி அரசாங்கமும் செய்ற்பட்டு வருகின்றமை தொடர்பில் தங்கள் கண்டனத்தையும் இதன்போது வெளிப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

GalleryGalleryGalleryGalleryGalleryGallery

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.