முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

பொது மன்னிப்பின் கீழ் விடுவிக்கப்பட வேண்டிய 37 கைதிகள் தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்

பொது மன்னிப்பின் கீழ் விடுவிக்கப்பட வேண்டிய 37 கைதிகள் இன்னும் விடுவிக்கப்படவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.

சிறைக் கைதிகளை விடுவிப்பது குறித்து விசாரணையை மேற்கொள்ளும் குற்றப்
புலனாய்வுத் துறையினர் இதனை கண்டறிந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கைதிகளின் விபரங்கள்

விசாரணையாளர்கள், கடந்த வாரம் 28 சிறைச்சாலைகளின் பதிவேடு அறைகளை ஆய்வு
செய்து சிறைக் கைதிகளின் விபரங்களைப் பெற்றுக்கொண்டனர்.

prisoners srilanka

இதன்படி, ஜனாதிபதி மன்னிப்பு பெற்ற 37 கைதிகள் விடுவிக்கப்படவில்லை என்றும்,
ஒரு கைதி தவறாக விடுவிக்கப்பட்டுள்ளார் என்றும் புலனாய்வாளர்கள்
கண்டறிந்துள்ளதாக அமைச்சர் விஜேபால தெரிவித்துள்ளார்.

விடுவிக்கப்பட வேண்டிய 37 கைதிகள் இன்னும் சிறைச்சாலைகளுக்குள் தடுத்து
வைக்கப்பட்டுள்ளனர்.

முழுமையான மதிப்பாய்வு

இந்த நிலையில், விசாரணையாளர்கள், நான்கு முதல் ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர்
வரையிலான ஜனாதிபதி மன்னிப்பு மற்றும் பிற பொது மன்னிப்புகளின் கீழ் சிறைக்
கைதிகள் விடுதலை செய்யப்பட்டமை தொடர்பில், முழுமையான மதிப்பாய்வை
மேற்கொள்ளவுள்ளார்கள் என்று அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

anandha vijayapala

பொதுவாக ஜனாதிபதி மன்னிப்புக்காக பரிந்துரைக்கப்பட்ட கைதிகளின் பெயர்கள்
அடங்கிய பட்டியலை சிறைச்சாலைத் திணைக்களமே தயாரிக்கிறது.

எனவே, தாம் சமர்ப்பிக்கும் பட்டியலில் உள்ள ஒவ்வொரு கைதியையும்
விடுவிப்பதற்குப் பதிலாக, சிறைச்சாலைத் திணைக்களம் மன்னிப்பு வழங்கப்பட்டதாகக்
கூறி, மாற்றுக் கைதிகளை விடுவித்துள்ளமை தெரியவந்துள்ளதாக அமைச்சர்
சுட்டிக்காட்டியுள்ளார்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்